நீ எனக்கு வேண்டவே வேண்டாம்...நாகசைதன்யா ஃபோட்டோவை டெலிட் செய்த சமந்தா

ஐதராபாத் : சமந்தாவும், நாக சைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்தனர். டோலிவுட், கோலிவுட் என பிரபலமாக இருந்த இந்த காதல் ஜோடி 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. கோவாவில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் அக்கினேனி குடும்பத்தை சேர்ந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மிகவுமக பவர்ஃபுல் ஜோடியாக வலம் வந்த இவர்கள், திடீரென பிரிய போவதாக இந்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி அறிவித்தனர்.

பிரிவை அறிவித்த ஜோடி

பிரிவை அறிவித்த ஜோடி

நாக சைதன்யா- சமந்தாவின் பிரிவு, விவாகரத்து போன்ற தகவல்கள் அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஜுலை மாதம் சமந்தா சோஷியல் மீடியாவில் டிஸ்ப்ளே பெயரை மாற்றியது முதல் விவாகரத்து பற்றிய வதந்திகள் வெளியான. இருந்தாலும் இருவரும் மெளனம் காத்ததால் இது வதந்தி என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவை உண்மை தான் என இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

சமந்தா மீது அவதூறு

சமந்தா மீது அவதூறு

இவர்கள் அறிவித்த பிறகும் விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம். அவர் குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்தது, அவருக்கு கள்ளத் தொடர்பு இருந்தது, பலமுறை அபார்ஷன் செய்து கொண்டார் என்பன போன்ற பல தவறான வதந்திகள் பரவின. இது தொடர்பாக அவதூறு பரப்பியவர்கள் மீது சமந்தா வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆன்மிக ட்ரிப்

ஆன்மிக ட்ரிப்

விவாகரத்தை அறிவித்த பிறகு தனது நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டியுடன் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி என ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார் சமந்தா. இந்த ஃபோட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, லைக்குகளை அள்ளி வருகிறார். சமந்தா தற்போது துபாயில் இருந்து வருகிறார்.

ஃபோட்டோக்களை நீக்கிய சமந்தா

ஃபோட்டோக்களை நீக்கிய சமந்தா

நாக சைதன்யாவை பிரிவதாகவும், விவாகரத்து பெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து சில வாரங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது திடீரென தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டிருந்த நாக சைதன்யாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள், திருமண ஃபோட்டோக்கள் என அனைத்தையும் நீக்கி உள்ளார் சமந்தா.

Recommended Video

பெண்களுக்கு கல்யாணம் முடியவில்லை | Samantha கொடுத்த Strong Advice
அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமந்தாவின் இந்த செயல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமந்தா, நாக சைதன்யா மீது இந்த அளவிற்கு கோபம் மற்றும் வெறுப்பில் இருக்கிறாரா. அப்படி இவர்களுக்குள் என்ன தான் பிரச்சனை நடந்ததோ தெரியவில்லையே என குழம்பி போய் உள்ளனர்.

விரைவில் புதிய படம்

விரைவில் புதிய படம்

சமந்தா தெலுங்கில் நடித்துள்ள சாகுந்தலம் படமும், தமிழில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதற்குள் தனது ட்ரிப்பை முடித்து விட்டு வந்து, புதிய படங்களின் வேலைகளை துவக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X