»   »  நாகசைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது: சமந்தா ஹேப்பி, ரசிகர்கள் கவலை

நாகசைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது: சமந்தா ஹேப்பி, ரசிகர்கள் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலர் நாக சைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நாகர்ஜுனா, சமந்தா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

அம்மா

என் தாயே எனக்கு தற்போது மகளாகியுள்ளார். இதை விட மகிழ்ச்சி அடைய முடியாது என நாகர்ஜுனா தனது மருமகள் சமந்தா பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமந்தா

சைதன்யாவும், சமந்தாவும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு தான் திருமணம் செய்ய உள்ளார்களாம்.

காதல்

காதல்

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் நடித்தபோதில் இருந்து சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அகில்

அகில்

நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகிலுக்கும் அவரது காதலிக்கும் நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அகிலின் திருமணம் வெளிநாட்டில் நடைபெற உள்ளது.

English summary
Actress Samantha has got engaged to Telugu actor Nagachaitanya at a grand ceremony in Hyderabad on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil