»   »  ஷூட்டிங் முடிந்ததும் ஜோடியாக ஊர்சுற்றக் கிளம்பிய சமந்தா!

ஷூட்டிங் முடிந்ததும் ஜோடியாக ஊர்சுற்றக் கிளம்பிய சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'நடிகையர் திலகம்' @ 'மகாநதி' படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து கணவருடன் டூர் கிளம்பிவிட்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக படங்களின் ஷூட்டிங் வந்ததால் இருவரும் அதிக நாட்கள் எங்கும் சுற்றவில்லை.

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'மகாநதி' என்ற படம் தயாராகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கிவரும் இந்தப் படம், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தயாராகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.

Samantha goes for a tour with her husband

மேலும், சமந்தா, நாக சைதன்யா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். சமந்தா, இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். இவருடைய போர்ஷன் சமீபத்தில் முடிந்தது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சமந்தா. மே 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்காக கணவருடன் டூர் கிளம்பிவிட்டார் சமந்தா. யாரும் இல்லாத, அதாவது மனித தொந்தரவு அதிகம் இல்லாத இடத்துக்கு இருவரும் டூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு பிஸியான ஷெட்யூல்களால் மிக விரைவாகவே தங்கள் ஹனிமூன் பயணத்தை முடித்துக்கொண்ட சமந்தா - சைதன்யா ஜோடி இந்த சம்மரை செமையாகக் கொண்டாடவிருக்கிறார்களாம். இன்ஸ்டாகிராமில் சமந்தா புகைப்படங்களை பதிவேற்றுவார் என எதிர்பார்க்கலாம்.

English summary
After finished the shooting of 'Mahanati', Samantha goes for a tour with her husband.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X