சமந்தா நல்லா இருக்காங்க… எல்லாமே வதந்தி தான்... முக்கியமான இடத்தில் இருந்து வந்த மெசேஜ்

ஹைதராபாத்: மயோசைட்டிஸ் (Mayositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா பல மாதங்கள் அதற்கான சிகிச்சையில் இருந்தார்.

சிகிச்சையின் நடுவே படப்பிடிப்புகளிலும் கலந்துகொண்ட சமந்தாவுக்கு திடீரென உடல்நிலைக்குறைவு என செய்திகள் வெளியாகின.

இதனால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்து உண்மையான நிலவரம் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சமந்தா?

மருத்துவமனையில் சமந்தா?

நடிகை சமந்தாவுக்கு சரும பிரச்னை ஏற்பட்டதால் அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்ததாக சொல்லப்பட்டது. இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீண்டும் நலமுடன் திரும்பி வருவேன் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சமந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

உண்மை இதுதான்

உண்மை இதுதான்

நாக சைதன்யா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வந்த நிலையில், சமந்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமந்தாவின் உடல்நிலை குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி, சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும், உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

கடந்த இரு தினங்களாக சமந்தாவின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இதனால், சமந்தாவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதற்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தாவை, நாக சைதன்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக சொல்லப்பட்டது. மேலும், சமந்தா - நாக சைதன்யா இருவரும் அவர்களது விவாகரத்து முடிவை கைவிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 2021 வரை சேர்ந்து வாழ்ந்தனர். நான்கே வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்தனர்.

விரைவில் சூப்பர் கம்பேக்

விரைவில் சூப்பர் கம்பேக்

மயோசைட்டிஸ் சிகிச்சையின் நடுவே சமந்தா நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான 'யசோதா' திரைப்படம், சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான யசோதா, பாக்ஸ் ஆபிஸிலும் 35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. சமந்தா இந்தப் படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யசோதா படத்தின் வெற்றியால், சமந்தாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்கள் சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ளதால், மீண்டும் சூப்பரான கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X