»   »  சினாகானாவுக்காக புது வித்தை கற்றுக் கொண்ட சமந்தா: வைரலான வீடியோ

சினாகானாவுக்காக புது வித்தை கற்றுக் கொண்ட சமந்தா: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தா சிலம்பம் சுற்றும்போது எடுத்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் ஹீரோயின்களில் ஒருவராக சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்த மாதம் முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

Samantha learns Silambam

தற்போது அவர் ராம் சரணை வைத்து சுகுமார் இயக்கி வரும் தெலுங்கு படத்தில் பிசியாக உள்ளார். இந்நிலையில் சமந்தா சிலம்பம் கற்றுள்ளார். தான் சிலம்பம் சுற்றியபோது எடுத்த வீடியோவை அவர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

புது பொழுதுபோக்காக சிலம்பம் கற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் சமந்தா. ஆனால் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ள படத்திற்காக அவர் சிலம்பம் கற்றுக் கொண்டதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

English summary
Samantha has posted a video of hers on twitter and facebook in which she was seen performing Silambam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil