»   »  சமந்தா ஒரு காட்சியில் கூட இல்லாத டீசர்... ரசிகர்கள் அதிருப்தி!

சமந்தா ஒரு காட்சியில் கூட இல்லாத டீசர்... ரசிகர்கள் அதிருப்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமந்தா ஒரு காட்சியில் கூட இல்லாத டீசர்

ஐதராபாத் : தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்து வரும் படம் 'ரங்கஸ்தலம்'. 1985-ல் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்திற்காக கோதாவரி ஆற்றங்கரையில் கிராமத்து செட் அமைத்து பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இப்படத்தில் சமந்தா மிக வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறார் சமந்தா. இந்த நிலையில், ஜனவரி 24-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியாகி 5 நாட்களில் இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்கள் 'ரங்கஸ்தலம்' டீசரைப் பார்த்துள்ளனர்.

Samantha missing in rangasthalam teaser

வெளியான 'ரங்கஸ்தலம்' டீசரில் கதாநாயகி சமந்தா ஒரு காட்சியில் கூட இடம்பெறவே இல்லை. இது சமந்தா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. சமந்தாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியானது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதும் குறிப்ப்பிடத்தக்கது.

சமந்தாவின் அந்த தனித்துவமான தோற்றம் விரைவில் வெளியிடப்படும் என்று 'ரங்கஸ்தலம்' படத்தின் இயக்குனர் சுகுமார் அறிவித்துள்ளார். நடிகர் ஆதி இப்படத்தில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார்.

சமந்தாவின் லுக் ஏற்கெனவே லீக் ஆகியிருந்தாலும், டீசரில் அவரைப் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு ரங்கஸ்தலம் டீசர் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், படக்குழு சமந்தா தொடர்புடைய அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
'Rangasthalam' movie starring Ramcharan and Samantha in Telugu directed by sukumar . Samantha acts as a village girl in this movie. 'Rangasthalam' teaser was released on January 24th. Samantha did not appears in this teaser. This was a big disappointment for Samantha fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil