»   »  கல்யாணத்துக்கு பிறகு சமந்தா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஒரே சமயத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்!

கல்யாணத்துக்கு பிறகு சமந்தா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஒரே சமயத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தெலுங்கில் நடித்து வரும் 'ரங்கஸ்தலம்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படம் மார்ச் 30-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

தமிழில் விஷால் ஜோடியாக நடித்திருக்கும் 'இரும்புத்திரை', தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவிருக்கும் 'மகாநதி' ஆகிய படங்கள் மார்ச் 29-ம் தேதி வெளியாக இருக்கின்றன.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

சினிமா நடிகைக்கு திருமணமாகிவிட்டால் வாய்ப்புகள் குறையும் என்பது பொதுவான பேச்சு. ஆனால், சமந்தா அந்த எண்ணத்தை முற்றிலுமாக உடைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

பீரியட் ஃபிலிம்

பீரியட் ஃபிலிம்

ராம்சரண் தேஜாவுடன் சமந்தா நடித்துள்ள படம் 'ரங்கஸ்தலம்'. சுகுமார் இயக்கியுள்ள இந்த படம் 1980-களில் நடக்கும் கதையில் உருவாகியிருப்பதால், அந்தக் காலகட்டத்து பெண்ணாகவே தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளார் சமந்தா.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

சமந்தா கிராமத்து கெட்டப்பில் சில மாடுகளை இழுத்துச் செல்லும் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. அதையடுத்து, இந்த படத்தில் சமந்தா நடித்துள்ள வித்தியாசமான கெட்டப் குறித்து அறிய ஆவலாக இருப்பதாக அவரது ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

சமந்தா மிஸ்ஸிங்

சமந்தா மிஸ்ஸிங்

ஆனால் ரங்கஸ்தலம் படத்தின் டீசர் வெளியானபோது அதில் சமந்தா இடம்பெறவில்லை. முழுக்க முழுக்க படநாயகன் ராம்சரணே இடம்பெற்றிருந்தார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பெருத்த அதிர்ச்சியடைந்தனர்.

சமந்தா மட்டும் இடம்பெறும் டீசர்

சமந்தா மட்டும் இடம்பெறும் டீசர்

அதையடுத்து சமந்தா மட்டுமே இடம்பெறும் டீசர் விரைவில் வெளியாகயிருப்பதாக அப்பட இயக்குனர் சுகுமார் தற்போது அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டு குஷியாகியுள்ளனர்.

ரங்கஸ்தலம் ரிலீஸ்

ரங்கஸ்தலம் ரிலீஸ்

தற்போது பல படங்களில் நடித்து வரும் சமந்தா, ரங்கஸ்தலம் படத்தில் தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துக்கொடுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். ராம்சரண் ஜோடியாக சமந்தா நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படம் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது.

ஒரே நேரத்தில் 3 படங்கள் ரிலீஸ்

ஒரே நேரத்தில் 3 படங்கள் ரிலீஸ்

சமந்தா நடித்துள்ள மூன்று படங்கள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளன. விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ள தமிழ்ப் படமான 'இரும்புத் திரை' தெலுங்கிலும் டப்பிங் ஆகி மார்ச் 29-ம் தேதி இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநதி' நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இந்தப் படமும் மார்ச் 29-ம் தேதியே வெளியாகின்றன.

ரொம்ப பிஸி

ரொம்ப பிஸி

ஒரே சமயத்தில் மூன்று படங்களின் பிரமோஷன்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் சமந்தா. மூன்று படங்களுமே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக அமைந்துள்ளதால், ரசிகர்களும் ஆவலாக இருந்து வருகின்றனர்.

English summary
Actress Samantha is doing a number of films in a row after marriage. The shooting of the film 'Rangasthalam' has been completed in Telugu. This film will be released on March 30th. 'Irumbuthirai' with Vishal in Tamil, Telugu and 'Mahanati' will be released on March 29.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil