»   »  நாகர்ஜுனா கண்டுபிடிக்காதபடி அடக்கி வாசிச்ச சமந்தா, நாகசைதன்யா

நாகர்ஜுனா கண்டுபிடிக்காதபடி அடக்கி வாசிச்ச சமந்தா, நாகசைதன்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மனம் படத்தில் நடிக்கும்போது நாக சைதன்யாவும், சமந்தாவும் அடக்கி வாசித்ததால் அவர்களின் காதல் தனக்கு தெரியாமல் போனது என நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

Samantha, Naga Chaitanya behave themselves: Nagarjuna

முன்னதாக சைதன்யாவின் தம்பி அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தன் வீட்டிற்கு இரண்டு மருமகள்கள் வரும் சந்தோஷத்தில் உள்ளனர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதி.

மனம் சூப்பர் ஹிட் படத்தில் நாகர்ஜுனா, அவரின் தந்தை நாகேஸ்வர ராவ், நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படத்தில் சமந்தா நாகர்ஜுனாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

மனம் படத்தில் நடிக்கும்போது சைதன்யா, சமந்தா காதல் பற்றி தெரியாதா என்று நாகர்ஜுனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், என் தந்தை இருந்ததால் இருவரும் அடக்கி வாசித்திருக்கிறார்கள். அதனால் தெரியவில்லை என்றார்.

English summary
Nagarjuna said that his son Naga Chaitanya and future daughter-in-law Samantha behaved themselves on the sets of Manam so he didn't notice their love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil