»   »  க்யூட் காதலி சமந்தா இனி சைதன்யாவின் மனைவி! #SamanthaWedding

க்யூட் காதலி சமந்தா இனி சைதன்யாவின் மனைவி! #SamanthaWedding

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா : கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற உள்ளது.

காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் இன்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.

இன்று இந்து முறைப்படி நடைபெறும் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொள்கிறார்கள்.

வெவ்வேறு மதம்

வெவ்வேறு மதம்

சமந்தாவும், நாக சைதன்யாவும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர்.

 இருமத முறைப்படியும் திருமணம்

இருமத முறைப்படியும் திருமணம்

இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்தவ முறைப்படியும் இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கோவாவில் உள்ள டபிள்யூ தங்கம் ஹோட்டலில் சமந்தா - நாகசைதன்யா திருமணம் நடைபெறுகிறது.

 திருமண ஏற்பாடு

திருமண ஏற்பாடு

திருமணத்தையொட்டி, சமந்தா, நாக சைதன்யா இருவரும் மூன்று நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர். கோவா கடற்கரைக்கு இருவரும் சென்று புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

 நாக சைதன்யா

நாக சைதன்யா

இந்து முறைப்படி மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடைபெற்றது. இதில் நாகார்ஜூனா, அமலா, வெங்கடேஷ், சைதன்யாவின் சகோதரர் அகில் ஆகியோர் சைதன்யாவை அழைத்து வந்தனர்.

 பாட்டியின் புடவை

பாட்டியின் புடவை

சமந்தா திருமணப் புடவையாக, நாக சைதன்யாவின் பாட்டியின் திருமணச் சேலையை கட்டுகிறார். இது மும்பையில் நவீன முறைப்படி டிஸைன் செய்து மெருகேற்றப்பட்டுள்ளது.

 திரையுலகினர் பங்கேற்பு

திரையுலகினர் பங்கேற்பு

உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டால் போதும் என்று சைதன்யா சொன்னதால் உறவினர்கள் மட்டும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டதாம். வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் கடைசியில் ஐதராபாத்தில் நடைபெறும். முக்கிய பிரமுகர்கள், திரை உலகினர், ரசிகர்கள் அதில் பங்கேற்பார்களாம்.

English summary
Actor Naga Chaitanya and actress Samantha are joining in the married life today. Their marriage is being held in a Goa star hotel today. Nagarjuna, Amala, Venkatesh and Akhil took Chaitanya to the wedding.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil