»   »  வா... வா... என் தேவதையே... - சமந்தாவைக் கரம்பிடித்த சைதன்யா! #ChaySam

வா... வா... என் தேவதையே... - சமந்தாவைக் கரம்பிடித்த சைதன்யா! #ChaySam

Posted By:
Subscribe to Oneindia Tamil
வா... வா... என் தேவதையே... - சமந்தாவைக் கரம்பிடித்த சைதன்யா!-வீடியோ

கோவா : கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது.

காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.

நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள். இன்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.

ஏஞ்சல் ட்ரெஸ்

ஆம்... தேவதைக் கதைகளை உண்மைதான் என இப்போதோவாது நம்பித்தான் ஆகவேண்டும்!

கதவிடுக்கில் சமந்தா

அரையடிக் கதவிடுக்கில் கசிகிற உன் முகத்தில்தான் மறைந்திருக்கின்றன கோடிப் புன்னகைகள்..!

சமந்தா சிரிப்பு

வாழ்நாளெங்கும் நீடித்திருக்கிற தூய்மையான புன்னகை இது... உன் புன்னகையால் அகிலம் ரட்சிக்கப்படட்டும்!

கோவா கடற்கரை

மடிமீது நீயிருக்க... உன் விழி மீது நானிருக்க... இருவருக்குமிடையே சிந்தும் புன்னகை கொண்டு இக்கடல்வெளியை நிறைப்போம்!

மகாராணி

மலர்களும் இவளைச் சூடிக் கொள்ள விழையும் அன்புலகின் முடிசூடா மகாராணி இவள்!

காதல் நிஜமானது

உன்னோடு நான் சேரும் காதல் நிஜமானதே... இன்னும் சில மணித் துளியில் நம் கனவு நனவாகுமே..!

காதல் அழகி

காதலி, மனைவியாகப் பிறவிப் பெரும்பயன் அடையப்போகிற கடைசி நிமிடத்தில் விளையாடும் தேவதை விளையாட்டு!

இன்னும் சில நொடியில்

இந்தப் பக்கம் நானிருக்க, அந்தப் பக்கம் நீயிருக்க... இருவரும் ஒன்றாகும் கணம் ஒரு நூலில் விலகி நிற்குதே... இனி வரும் காலமெல்லாம் நீயேயென் உயிருமென ஒரு கணம் இதயம் எகிறித் துடிக்குதே..!

அன்பு தழும்பும்

கண்களில் நிறைந்திருக்கும் நம் புன்னகை மீது சாட்சியாக, உனக்கு நானும் எனக்கு நீயுமென வாழப்போகும் இவ்வாழ்வில் எப்போதும் அன்பு தழும்பிக் கொண்டிருக்கும் எனச் சத்தியம் செய்கிறோம்!

English summary
The marriage of actress Samantha and Naga Chaitanya was held at goa yesterday by hindu culture. They shared wedding photos on Twitter. Their marriage is going on in a Christian way today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil