Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சமந்தா-நாகசைதன்யா விவகாரம்...புதிய ட்விஸ்ட்...ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை : சமந்தா, நாக சைதன்யா மீண்டும் ஒன்று சேர உள்ளது உறுதியாகி விட்டது. இந்த தகவல் இருவரின் ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்துள்ளது. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்கள்.
கடந்த ஜுன் மாதம் துவங்கி கிட்டதட்ட ஒரு வருடமாக மீடியாக்களில் அதிகம் பேசப்பட்ட தகவல் என்றால் அது சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து விஷயம் தான். தற்போது வரை அது தொடர்பான பரபரப்பு குறையவில்லை. இருந்தாலும் சமந்தா, நாக சைதன்யா இருவருமே தங்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.
ப்பா.. கன்னா பின்னா கவர்ச்சியால இருக்கு.. காஸ்மோபாலிடன் கவர் போட்டோவுக்கு சமந்தா கொடுத்த ஹாட் போஸ்!

கிளாமருக்கு மாறிய சமந்தா
காதலித்து, திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்திற்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவின. இவை அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்த சமந்தா, கணவரை பிரிந்த பிறகு ஓவராக கிளாமர் காட்ட துவங்கினார்.

ஒரு வார்த்தை கூட பேசலியே
சொல்லப் போனால் விவாகரத்திற்கு பிறகு சமந்தா என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆவதால், அவர் தனி பிராண்டாகவே இந்திய சினிமாவில் உருவெடுத்துள்ளார். இருந்தாலும் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் ஒரே இடத்தில் நடந்த ஷுட்டிங்கில் கலந்து கொள்ள வந்த இருவரும் நேருக்கு நேர் பார்த்தும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் தங்களின் கார்களில் ஏறி சென்றுள்ளனர்.

நிஜமா ஒன்னு சேர போறாங்களா
இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் ட்விஸ்ட் என்ன வென்றால் அவர்கள் ஒன்று சேர போவது நிஜ வாழ்க்கையில் இல்லையாம். சினிமாவில் மட்டும் தானாம். பிரபல பெண் டைரக்டரான நந்தினி ரெட்டி, தான் இயக்க போகும் புதிய படத்தில் நாக சைதன்யா- சமந்தா ஜோடியை ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறாராம்.

இது ஏற்கனவே போட்ட பிளானா
2019 ம் ஆண்டு ஓ பேபி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களிடம் மற்றொரு படத்தில் சேர்ந்து நடிக்க கதை கூறி உள்ளார். 2013 ம் ஆண்டு ஜபர்தஸ்த் படத்தில் நடிக்கும் போதிருந்தே சமந்தாவும், நந்தினி ரெட்டியும் ரொம்பவும் க்ளோசாம். இதனால் தான் இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்று சேர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இந்த படம் பற்றியும் நாக சைதன்யா, சமந்தா மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பது பற்றியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.