»   »  கேட்டீகளா.. சோலார் ஸ்டார் ராஜகுமாரனுக்கு ஜோடி சமந்தாவாமே?

கேட்டீகளா.. சோலார் ஸ்டார் ராஜகுமாரனுக்கு ஜோடி சமந்தாவாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த செய்தியை கேட்கற யாருக்குமே நம்ம சமந்தாவுக்கு இப்படி ஒரு சோதனையா? அப்படின்னுதான் நெனைக்கத் தோணும்.

அப்படி என்ன விஷயம்னு கேக்குறீங்களா? சோலார் ஸ்டார் பட்டத்தைப் கைப்பற்றியிருக்கிற நடிகர் ராஜகுமாரனுக்கு சமந்தா ஜோடியா நடிக்கப் போறார்ங்கிற செய்திதான்.

Samantha Next in Vijay Milton's Movie

கோலி சோடா, 10 என்றதுக்குள்ள படங்களை எடுத்த இயக்குநர் விஜய் மில்டன் அடுத்ததா இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரனை கதையோட நாயகனா வச்சு ஒரு படத்தை எடுக்கப் போறார்.

இந்தப் படத்தில ராஜகுமாரனுக்கு வில்லனா பரத் நடிக்க, சோலார் ஸ்டார்க்கு ஜோடியா சமந்தா நடிக்கப் போறாங்கன்னு செய்தி வெளியாக காலையில இருந்து டோலிவுட், கோலிவுட் வட்டாரமே பரபரத்துக் கிடக்கு.

நாமளும் கொஞ்சம் அதிர்ச்சியோட இதைப் பத்தி விசாரிச்சா பொழுது போகாத யாரோ பார்த்த வேலையிது. இந்த செய்தியில கொஞ்சம் கூட உண்மையில்லைன்னு விஜய் மில்டனே சொல்லிட்டாரு.

இதைக் கேட்டதுக்கப்புறம் தான் சமந்தா ரசிகர்களுக்கு போன உசிரு திரும்ப வந்திச்சு. ஏன் சமந்தாவே இதைக் கேட்டா டென்ஷனாகித் தான் இருப்பாங்க.

English summary
Sources Said Actress Samantha Next to act in Vijay Milton's Movie, Opposite to Rajakumaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil