Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஷாருக்கோட ஜவான் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. சூப்பர் சான்சை மறுத்த சமந்தா.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : நடிகை சமந்தா நாக சைத்தன்யாவுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த ஆண்டில் வெளியிட்டார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தளபதி 67 படத்தில் இவர்தான் நாயகி என்று கூறப்படுகிறது.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஷாருக்கான், அட்லீ பட தலைப்பு இதுதான்.. டபுள் ரோலில் டபுள் ட்ரீட்!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கில் அறிமுகமானாலும் பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தார். குழந்தை போன்ற இவரது சிரிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்களுடன் ஆக்டிங்
தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். விஜய்யுடன் மட்டுமே தெறி, மெர்சல் மற்றும் கத்தி ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட். தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 படத்திலும் விஜய்க்கு இவர்தான் ஜோடி என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

சிறப்பான கதீஜா கேரக்டர்
சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சமந்தா. இந்தப் படம் அவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக இவரது நடிப்பில் யசோதா படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் இந்திய அளவில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

குஷி படத்தில் சமந்தா
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய அழகை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார் சமந்தா.

சிறப்பான வொர்க் அவுட்
அதற்கு அதிகப்படியான மெனக்கெடலை செய்து வருகிறார் சமந்தா. அவரது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வொர்க் அவுட் வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார். 90 கிலோ எடையை இறுதியாக அவர் தூக்கினார். 100ஐ நெருங்கவுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.

ஷாருக்கை மறுத்த சமந்தா
பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் படம் ஜவான். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. முன்னதாக இந்தக் கேரக்டரில் நடிக்க சமந்தாவைத்தான் முதலில் அட்லி அணுகியிருந்தாராம்.

முடிவுகளை எடுப்பதில் சிக்கல்
இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கியவுடனேயே, கடந்த 2019ல் சமந்தாவை இந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அப்போது நடிகர் நாகசைத்தன்யாவுடன் திருமண பந்தத்தில் இருந்த சமந்தாவிற்கு நடிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சில சிக்கல்கள் இருந்ததாகவும் அதனால்தான் இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் பாலிவுட்டில் சமந்தா
ஷாருக்கிற்கு நயன்தாரா நல்ல சாய்சாக இருந்தபோதிலும், பாலிவுட்டில் பிரபலமாக உள்ள சமந்தா நடித்திருந்தால் அந்தக் கேரக்டர் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விரைவிலேயே சமந்தாவை பாலிவுட்டில் பார்க்கலாம் என்பதே தற்போது கூறப்படும் தகவல்.

இரட்டை வேடங்களில் ஷாருக்
ஷாருக் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்தை ஷாருக்கின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் ஷாருக் நடித்து வருவதாகவும் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தற்போதே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் படத்தின் போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.