»   »  ஒரு மாதம் தேனிலவுக்கு போகிறேனா?: சமந்தா விளக்கம்

ஒரு மாதம் தேனிலவுக்கு போகிறேனா?: சமந்தா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமந்தாவும், நாக சைதன்யாவும் தேனிலவுக்காக ஒரு மாதம் அமெரிக்காவுக்கு செல்வதாக கூறப்பட்டது.

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடப்பதாக இருந்தது.

தற்போது திருமண நிகழ்ச்சி கோவாவில் நடக்கிறதாம்.

சிம்பிள்

சிம்பிள்

சமந்தா, சைதன்யாவின் நிச்சயதார்த்தமே ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது. ஆனால் திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்த உள்ளார்களாம்.

தேனிலவு

தேனிலவு

சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரு மாதம் காலம் இருப்பார்கள் என்று கூறப்பட்டது.

சமந்தா

சமந்தா

ஒரு மாதம் தேனிலவுக்கு போவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார். தேனிலவு பற்றி யோசிக்கக் கூட நேரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

படங்கள்

படங்கள்

நானும், சைதன்யாவும் படங்களில் பிசியாக இருக்கிறோம். சொல்லப் போனால் திருமணம் முடிந்த மூன்றாவது நாளே இருவரும் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம் என்கிறார் சமந்தா.

English summary
Samantha has rubbished the rumours that she and Naga Chaitanya are planning a one-month long honeymoon in New York.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil