»   »  ஜெமினி கணேசனின் 'முதல் மனைவியான' சமந்தா!

ஜெமினி கணேசனின் 'முதல் மனைவியான' சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாகப்போகிறது. இதில் சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள்.

முதலில் சாவித்திரி வேடத்தில்தான் சமந்தா நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறாராம். சமந்தாவுக்கு ஜெமினி கணேசனின் முதல் மனைவி வேடமாம்.

Samantha plays Gemini Ganesan's first wife

சமந்தா தான் கீர்த்தி சுரேஷை விட நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை. உடல்வாகும் சாவித்திரியோடு ஒத்துப்போகும். ஆனால் சமந்தாவுக்கு திருமணம் என்பதால் மார்க்கெட் டல்லாகி விடும். கீர்த்தி சுரேஷ் என்றால் வியாபாரத்துக்கு பயன்படும் என்று மாற்றிவிட்டார்கள். நடிகையர் திலகத்தின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதா? என்று எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.

படக்குழுவோ 'முதல் மனைவி கேரக்டர்தான் அதிகம் நடிக்க ஸ்கோப் உள்ள ரோல். எங்க டைரக்டர் யோசிக்காம எதையும் செய்ய மாட்டார்' என்று சப்போர்ட் செய்கிறது.

English summary
Sources say that Samantha is playing as Gemini Ganesan's first wife in Savithri movie and Keerthy Suresh doing the title role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil