»   »  தெறி அப்டேட்: காவல் அதிகாரியாக விஜய்.. கண்ணியமிக்க மருத்துவராக சமந்தா

தெறி அப்டேட்: காவல் அதிகாரியாக விஜய்.. கண்ணியமிக்க மருத்துவராக சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் நடிகை சமந்தா 'மித்ரா எம்பிபிஎஸ்' என்னும் வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ராஜா ராணி புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.


Samantha plays Mithra MBBS in Theri

தெறியில் விஜய் விஜய்குமார் ஐபிஎஸ்ஸாக நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் வெளிப்பட்டுள்ளது. சமந்தா இதில் மித்ரா எம்பிபிஎஸ் என்னும் டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார்.


சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் விஜய்குமார் ஐபிஎஸ் என்னும் விஜய், மித்ரா எம்பிபிஎஸ் என்னும் சமந்தாவை மணமுடிக்க செல்வதாக காட்சிகள் உள்ளன.


எமி ஜாக்சன் இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதால், மித்ரா எம்பிபிஎஸ் என்னும் கதாபாத்திரம் கண்டிப்பாக சமந்தாவுடையது தான் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.எனினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதனை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்யின் பெற்றோர்களாக பிரபு, ராதிகாவும் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகாவும் நடித்து வருகின்றனர்.


தெறி படத்தின் டீசர் குடியரசு தினத்திலும், படம் தமிழ்ப்புத்தாண்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Vijay's Theri Shooting has Come to on end. Now Samantha's Role Revealed this film, she is Played Mithra MBBS in Theri.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil