இப்ப என் மகன் நாக சைதன்யாசந்தோஷமாக இருக்கிறான், அதுபோதும்..வாய்திறந்த நாகர்ஜுனா

சமந்தா பிரபு, நாகசைதன்யா பிரிவால் தனது மகன் சந்தோஷமாக இருக்கிறான் அது ஒன்றே போதும் என நாகார்ஜுனா கூறியுள்ளார்.

சமந்தா பிரபு, நாகசைதன்யா திருமண உறவு முறிந்து ஓராண்டானாலும் இன்றும் அது ஊடகங்களில் விவாதப்பொருளாக உள்ளது.

தங்கள் பிரிவு குறித்த கேள்விகளை கேட்டு கேட்டு அதற்கு பதிலளித்து சலித்து போய்விட்டேன் என நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

பாரம்பரியம் மிக்க நாகார்ஜுனா குடும்பம்

பாரம்பரியம் மிக்க நாகார்ஜுனா குடும்பம்

தெலுங்கு திரையுலகில் நாகேஷ்வரராவ், என்டிஆர் இருவரும் எம்ஜிஆர் சிவாஜி போல் உச்ச நடிகர்களாக இருந்தனர். இவர்களுக்கு பின் இவர்களது வாரிசுகள் 80 களின் இறுதியில் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினர். நாகேஷ்வரராவின் மகன் தான் நாகார்ஜுனா. இவர் 80 களின் இறுதியில் உதயம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். இவர் பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர் மகளை மணந்தார். சில ஆண்டுகள் கழித்து இவரது மணவாழ்க்கையிலும் முறிவு ஏற்பட்டது. பின்னர் நடிகை அமலாவை மணந்தார். முதல் மனைவி மூலம் நாகசைதன்யா என்கிற மகனும், நாகார்ஜுனா-அமலா தம்பதிக்கு அகில் என்கிற மகனும் உள்ளனர். இருவருமே கதாநாயகன்களாக நடிக்கின்றனர்.

நாகசைதன்யா-சமந்தா திருமணமும், விவாகரத்தும்

நாகசைதன்யா-சமந்தா திருமணமும், விவாகரத்தும்

நாக சைதன்யா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மகன். தனது பட நாயகியான சமந்தாவோடு நடிக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட நட்பு வலுப்பட்டது. 'மனம்', 'ஆட்டோநகர் சூர்யா', 'மஜிலி' என இருவரும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த நிலையில் நட்பு காதலானது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என இரண்டு ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு இறுதியாக 2017-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், நான்கு வருடம் முடிவதற்குள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது விவாகரத்தில் முடிந்தது. நாகாவும் சமந்தாவும் 2021 அக்டோபரில் பிரிந்ததாக அறிவித்தனர். அதன்பிறகு, அவர்களது உறவைப் பற்றி நிறைய எழுதப்பட்டு வருகிறது.

திடீர் ரியாக்‌ஷன் காட்டிய நாகார்ஜுன்

திடீர் ரியாக்‌ஷன் காட்டிய நாகார்ஜுன்

பிரம்மாஸ்திரா முதல் பாகம் சிவா படத்தின் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் நாகார்ஜுனா, சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சமந்தா ரூத் பிரபுவுடனான தனது மகன் நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசினார். சமீபத்தில், நாகார்ஜுனா மகனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிவந்த அனைத்து விஷயங்கள் குறித்து அவரது ரியாக்‌ஷன் என்னவென்று கேட்டபோது, எனது முதல் சந்தோஷம் என் மகன் நாக சைதன்யாவின் மகிழ்ச்சிதான் என்று கூறினார். அவர் இப்ப மகிழ்ச்சியாக இருக்கிறார், நான் எதிர்பார்ப்பது அவ்வளவுதான். அது எனக்கு போதும், நாகசைதன்யாவுக்கு ஏற்பட்ட அனுபவம். துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

பதில் சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு..நாகசைதன்யா

பதில் சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு..நாகசைதன்யா

சமந்தாவுடன் தனது திருமண முறிவு குறித்து நாகசைதன்யா கூறுகையில் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட முடியாது. இப்ப எங்கள் வாழ்க்கையில் எங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை. எங்கள் விவாகரத்து பற்றி மக்கள் கேட்பதை கேட்டு கேட்டு எனக்கு சலிப்பாக ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் பிரிந்ததை எத்தனை தடவைச் சொன்னாலும் அதிலும் ஏதாவது புதிதாக கண்டுபிடித்து கேட்பதால் நான் சலிப்படைந்துவிட்டேன் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X