For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சபதத்தில் வென்ற சமந்தா..கணவரை பிரிந்தால் என்ன?.. இதை செய்துவிட்டாரே

  |

  விவாகரத்துக்குப்பின் தான் ஏற்ற சபதத்தை நிறைவேற்றும் விதமாக சம்பாதித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார் சமந்தா. அவரது லேட்டஸ்ட் பர்சேஸ்தான் இப்போதைய பேசுபொருள்

  நடிகர் நாகசைதன்யாவை மணந்த சமந்தாவின் திருமண வாழ்வு சில ஆண்டுகளிலேயே முறிந்தது. அது பலவித சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

  இந்நிலையில் சமந்தா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். படங்களில் கவனத்தை செலுத்தி இழந்த செல்வாக்கை மீட்டு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

  ஹீரோவை பார்த்து ஏமாந்து போயிட்டோமே.. இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் பால் வடியும் பாப்பா நடிகை!ஹீரோவை பார்த்து ஏமாந்து போயிட்டோமே.. இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் பால் வடியும் பாப்பா நடிகை!

  விவாகரத்து பெற்ற சமந்தா-சைதன்யா

  விவாகரத்து பெற்ற சமந்தா-சைதன்யா

  நடிகை சமந்தா ரூத் பிரபு டோலிவுட்டின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணந்தார். இல்வாழ்வு நன்றாக போன நிலையில் சில வேண்டாத நண்பர்களால் மனமுறிவு ஏற்பட்டு மணமுறிவு வரை சென்றுவிட்டது. நான்காண்டு மணவாழ்வு முடிவுக்கு வந்தது. சமந்தாவும்- நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து பெற்றனர். இத்தோடு அவரது வாழ்க்கை முடிந்தது என நினைத்த நிலையில் சம்ந்தா மீண்டும் திரைப்படங்களில் தோன்ற தொடங்கினார்.

  சமந்தா-நாகசைதன்யா செய்திகளுக்கு மவுசு

  சமந்தா-நாகசைதன்யா செய்திகளுக்கு மவுசு

  சமந்தாவின் தொடர் முயற்சி காரணமாக அவர் தமிழ், தெலுங்கு படங்களில் படு பிசி. நயன்தாராவுக்கு அடுத்து பெரிய அளவில் சம்பாதிப்பவர் என அவர் பேசப்படுகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக இருக்கும் சமந்தா முன்பைவிட சுறுசுறுப்புடன் பட வேலைகளில் கவனம் செலுத்துகிறார். சமந்தா நாகசைதன்யா இருவரும் பிரிந்தாலும் அவர்களைச் சுற்றி வரும் செய்திகளுக்கு எப்போதும் மவுசு உள்ளது.

  ரூ.250 கோடி இழப்பீடு பெற்றாரா? சமந்தா

  ரூ.250 கோடி இழப்பீடு பெற்றாரா? சமந்தா

  சமந்தா பிரிந்தபோது அவருக்கு ரூ.250 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பினர். இதை சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு சிரித்த சமந்தா, " அடேங்கப்பா 250 கோடி ரூபாய் எவ்வளவு பெரிய தொகை, அப்படியாவது ஐடி ரெய்டு வரட்டும். உண்மை என்னன்னு இந்த உலகத்துக்கு தெரியும். அதீத பொய் நீண்ட நாள் நிலைக்காது என்பதற்கு இந்த வதந்திகள் ஒன்றுமிலாமல் போனதே" உதாரணம் எனக் கூறியிருந்தார்.

  விவாகரத்துக்குப்பின் படபிடிப்பில் கவனம் செலுத்தும் தம்பதி

  விவாகரத்துக்குப்பின் படபிடிப்பில் கவனம் செலுத்தும் தம்பதி

  விவாகரத்துக்கு பின்னர் இருவரும் படங்களில் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். தான் அனைத்தையும் மறக்க விரும்புவதாகவும், படங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் நாகசைதன்யா கூறியிருந்தார். சமந்தாவும் பல படங்களில் நடித்து முடித்துவிட்டார் தற்போது கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்கள் வைத்துள்ளார். நாக சைதன்யா அமீர்கான் உடன் இணைந்து நடித்துள்ள லால் சிங் சத்தா திரைக்கு வர உள்ளது.

  வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா

  வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா

  சமீபத்தில் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான முரளி மோகன் அளித்துள்ள ஒரு பேட்டியில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் சேர்ந்து வாழ்ந்த வீட்டை சமந்தா தானே வாங்கியதாக கூறியுள்ளார். இணையத்தில் வெளியான ஒரு பேட்டியில் "சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்துகொண்டபோது அவர்கள் ஒரு தனி வீட்டை வாங்கி அதில் தங்கினர், அவர்கள் பிரிந்து செல்லும்போது, ​​வீட்டை சேர்த்து ஏற்பாடு செய்து, அதிக விலைக்கு வீட்டை மீண்டும் வாங்கிவிட்டார். இப்போது அவர் அம்மாவுடன் அங்கே வசிக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

  சபதத்தில் வென்ற சமந்தா

  சபதத்தில் வென்ற சமந்தா

  சமந்தா 4 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை மன வருத்தத்துடந்தான் விற்றிருப்பார். அப்போதே அவர் மனதிற்குள் இந்த அவமானத்தை துடைத்து மீண்டும் இதே வீட்டை வாங்க வேண்டும் என சபதமெடுத்துள்ளார். அதை தற்போது அவர் வென்று காட்டிவிட்டார் என்கின்றனர் சமந்தாவுக்கு நெருக்கமானவர்கள். ஒரு பெண்ணாக தனக்கு நேர்ந்த பிரிவை, இழப்பை கண்டு துவண்டு விடாமல் மீண்டெழுந்து மீண்டும் தனது வீட்டை வாங்கி தாயாரை அங்கு வைத்து அழகு பார்க்கும் சமந்தா பாராட்டத்தக்கவர்தான்.

  English summary
  After the divorce, Samantha has fulfilled her wish by earning as a fulfillment of her vow. Her latest purchase is the talk of the town.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X