யசோதையாக மாறிய சமந்தா... புதிய பட ஷுட்டிங் துவங்கியது
ஐதராபாத் : தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் சமந்தா. தெலுங்கில் சகுந்தலம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா.
காதல் கணவர் நாக சைதன்யா உடனான விவாகரத்தை அறிவித்த பிறகு, பல விதமாக விமர்சனங்கள், பிரச்சனைகளை சந்தித்துள்ளார் சமந்தா. தனது தோழியுடன் ஆன்மிக பயணம் சென்று வந்த சமந்தா, துபாயில் ஓய்வெடுத்து திரும்பி உள்ளார்.

அயிட்டம் சாங்கில் சமந்தா
தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க சமந்தாவிடம் பேசப்பட்டு வந்தது. விவாகரத்திற்கு பிறகு முதல் முறையாக அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஓகே சொல்லி உள்ளார். இதற்காக ரூ.1.5 கோடி சமந்தாவிற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த பாடலுக்கான ஷுட்டிங்கை சமந்தா ஏற்கனவே துவக்கி விட்டதாக கூறப்பட்டது.

புதிய படம் யசோதா
இந்நிலையில் சமந்தாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யசோதா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பூஜையுடன் யசோதா படத்தின் ஷுட்டிங் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலேகா கிருஷ்ண பிரசாத் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

த்ரில்லர் படம்
நவீன காலகட்டத்திற்கான த்ரில்லர் படமாக தயாராக உள்ள இந்த படத்தை ஹரி, ஹரிஷ் இணைந்து இயக்க உள்ளனர். சமந்தா எழுந்தாளராக நடிக்க உள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

பான் இந்தியன் நடிகை
இந்த படம் பற்றி தயாரிப்பாளர் சிவலேன்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், தி ஃபேமிலிமேன் 2 வெப்சீரிசிற்கு பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பான் இந்தியன் நடிகையாகி விட்டார் சமந்தா. தற்போது அவருக்கு இருக்கும் இமேஜிற்கு இந்த த்ரில்லர் படத்தில் நடிக்க கஷ்டப்பட்டு பேசி சம்மதிக்க வைத்தோம். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும் என்றார்.

விரைவில் அறிவிப்பு
யசோதா படத்தின் ஷுட்டிங் 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். மணி சர்மா இசையமைக்க உள்ளதாகவும், எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











