கர்ப்பம் பற்றி ஓப்பனாக பேசிய சமந்தா... கப்சிப்பான சோஷியல் மீடியாக்கள்
ஐதராபாத் : நாகர சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் சமந்தா, தற்போது பேட்டி ஒன்றில் கர்ப்பம் பற்றி ஓப்பனாக பேசி உள்ளது கண்டபடி கருத்து சொல்லி வந்த சோஷியல் மீடியாக்களை வாயடைத்து போக வைத்துள்ளது.
சேர்ந்து நடித்த போது காதலில் விழுந்த சமந்தா, நாக சைதன்யா இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2017 ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. நான்கு வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரிய போவதாக அறிவித்தனர்.

அவதூறு பரப்பிய சோஷியல் மீடியா
பிரிவை அறிவித்த பிறகு சோஷியல் மீடியா, தெலுங்கு யூட்யூப் சேனல்கள் என பலவற்றிலும் இவர்களின் விவாகரத்து முடிவுக்கு பல காரணங்களை கூறி வந்தனர். சமந்தா குழந்தை பெற்று கொள்ள விரும்பவில்லை எனவும், அவர் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் பலவிதங்களில் தகவல் பரவியது. இதனால் கடுப்பான சமந்தா, கோர்ட் வரை செய்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார்.

சமந்தா பற்றி இப்படி சொல்லிட்டிங்களே
அதற்கு பிறகு சமந்தாவின் பிரிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை. அதே சமயம் சமந்தாவிற்கு நெருக்கமான சில தகவல்கள் கூறுகையில், ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த சமந்தா திட்டமிட்டிருந்ததாக கூறினர். இந்நிலையில் கர்ப்பம் பற்றி சமந்தாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி உள்ளார்.

குழந்தை பிறப்பு பற்றி பேசிய சமந்தா
அவர் தனது பேட்டியில், பெண்கள் உண்மையிலேயே ரொம்ப ஸ்டிராங். உலகத்திலேயே மிக வலியான நிகழ்வு என்றால் அது குழந்தை பிறப்பு தான். அந்த வலியையும் பெண்கள் துணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள். குழந்தை பிறப்பின் போது உச்சபட்ச வலியையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். குழந்தை பெற்ற பிறகும் பல வலிகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இருந்தாலும் குழந்தையின் முகத்தை பார்த்து பெண்கள் மகிழ்ச்சியாக சிரிக்கிறார்கள் என கூறி உள்ளார். சமந்தாவின் இந்த பேச்சு, அவர் குழந்தை பெற்றுக் கொள்ள எதிரானவர் என பேசிய அனைவரையும் வாயடைத்து போக வைத்துள்ளது.
Recommended Video

அடுத்த அயிட்டம் சாங்கிற்கு ரெடி
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆடி அனைவரையும் பேச வைத்தார். புஷ்பா பட பாடல் தாறுமாறாக ஹிட் ஆனதால் விஜய் தேவரகொண்டா நடிக்கும் Liger படத்திலும் அயிட்டம் சாங்கிற்கு நடனமாட சமந்தாவை புக் செய்துள்ளார்களாம். சமந்தா ஒப்பந்தமாகி இருக்கும் முதல் சர்வதேச படம் இது தான். தற்போது ஓய்விற்காக ஸ்விட்சர்லாந்து சென்றிருக்கும் அவர், சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











