twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யசோதா பிரீ தியேட்டர் பிசினஸ்… கெத்து காட்டிய சமந்தா… மிரண்டு போன திரையுலகம்…

    |

    ஐதராபாத்: சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்றிருந்தார்.

    இந்நிலையில், யசோதா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.

    விஜய் பட ப்ரொடியூசரிடம் லவ் டுடே தெலுங்கு வெர்ஷன்… அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய பிரதீப்?விஜய் பட ப்ரொடியூசரிடம் லவ் டுடே தெலுங்கு வெர்ஷன்… அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய பிரதீப்?

    சமந்தாவின் யசோதா

    சமந்தாவின் யசோதா

    சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யசோதா வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள யசோதா, மருத்துவத் துறையில் நடக்கும் வாடகைத் தாய் மோசடிகளை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

    ப்ரோமோஷனில் சமந்தா

    ப்ரோமோஷனில் சமந்தா

    சில தினங்களுக்கு முன்னர் வெளியான யசோதா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்சன் காட்சிகளில் சமந்தாவின் வேகம் சிலிர்க்க வைத்தது. ட்ரெய்லரின் முடிவில் வரும் "யசோதா யாருன்னு தெரியும்ல" என்ற சமந்தா பேசும் வசனமும் ட்ரெண்டானது. இந்நிலையில், யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, அவரது தனிப்பட்ட பிரச்சினைகளையும் கூறி கண்கலங்கினார். மேலும், அவர் தற்போது மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

    பிரீ தியேட்டர் பிசினஸ்

    பிரீ தியேட்டர் பிசினஸ்

    யசோதாவின் உடல்நிலை பற்றி செய்திகள் வெளியானதால், யசோதா படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், தியேட்டர் பிரீ ரிலீஸ் பிசினஸில் மாஸ் காட்டியுள்ளது யசோதா. இந்தப் படத்தின் ஒடிடி ரைட்ஸ் 24 ரூபாய் கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 13 கோடி ரூபாய்க்கும், இந்தி ரைட்ஸ் 3.5 கோடி ரூபாய்க்கும் விற்பனை ஆகியுள்ளதாம். அதேபோல், சர்வதேச ரைட்ஸும் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கும், தியேட்டர் ரைட்ஸ் 10 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகமொத்தம் 53 கோடி ரூபாய்க்கு யசோதா படத்தின் பிரீ தியேட்டர் பிசினஸ் நடந்துள்ளது.

    இயக்குநர்கள் கருத்து

    இயக்குநர்கள் கருத்து

    ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் சமந்தாவின் படம் தியேட்டர்களில் வெளியாகும் முன்பே 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில், யசோதா குறித்து பேசிய இயக்குநர்கள் ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர், இந்தப் படத்தில் சமந்தா நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது, செட்டில் இருந்த அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்ததோடு, எப்போதும் திரைக்கதையில் கவனம் செலுத்தினார். மேலும், எங்கள் மீது நம்பிக்கை வைத்து யசோதா படத்தில் நடித்து முடித்தார். உணர்வுப்பூர்வமாக உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். படத்தின் இரண்டாம் பாதி செம்ம த்ரில்லராக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

    English summary
    Samantha starrer Yashoda is releasing on the 11th. Yashoda collected more than 53 crores before its theatrical release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X