திரையரங்குகளில் 25 நாட்கள் சக்சஸ்... அமேசானில் சமந்தாவின் யசோதா: ஓடிடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
ஐதராபாத்: சமந்தா நாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியான யசோதா படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
யசோதா திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ள நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கம்பேக் கொடுத்த சமந்தா
சமந்தா நடித்துள்ள யசோதா படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தப் படம் தெலுங்கில் உருவாகி இருந்தாலும், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமந்தா லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இணைந்து இயக்கியுள்ளனர். சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள யசோதா, அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

திரையரங்குகளில் 25 நாட்கள்
யசோதா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததோடு, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. இதனால், திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது யசோதா. முன்னதாக யசோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த சமந்தா, சில இடங்களில் எமோஷனலாகி அடிக்கடி கண் கலங்கினார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சமந்தாவிற்கு ஆறுதல் தரும் வகையில் யசோதா படத்தின் வெற்றி அமைந்துள்ளது.

யசோதா ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துவிட்ட யசோதா, அடுத்து ஓடிடியிலும் ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட் கொடுக்கவுள்ளது. ஏற்கனவே யசோதா ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதன்படி, இந்தப் படம் இந்த வாரம் 9ம் தேதி அமேசான் ப்ரைமில் ஸ்டீரிமிங் ஆகிறது. இதனால், தியேட்டரில் யசோதா படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் காண ஆர்வமாக உள்ளனர். திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே யசோதாவின் ஓடிடி ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை
யசோதா படத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை மொத்தம் 70 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னணி ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் சமந்தாவின் யசோதா படம் வசூல் செய்துள்ளது, திரையுலகில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்து வரவிருக்கும் சமந்தாவின் சாகுந்தலம் குஷி படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வாடகைத் தாயான சமந்தா
யசோதா படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ள சமந்தா, ரொம்பவே சென்சிட்டிவான கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். அதேபோல், ஆக்சன் காட்சிகளிலும் அதகளம் செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். தியேட்டரில் வெளியாகும் முன்பே யசோதா படம் ப்ரீ ரிலீஸ் மூலமாகவும் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தொடர்ந்து மயோடிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











