Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அந்த ஃபீலிங்கில் இருக்கிறாரா சமந்தா.. டிசர்ட் வாசகம் மூலம் சொல்ல வருவது என்ன? ரசிகர்கள் கேள்வி!
சென்னை: நடிகை சமந்தா தனது முகத்தைக் கூட காட்டாமல் வெறும் டிசர்ட் மட்டுமே காட்டியபடி எடுத்த செல்ஃபி போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு பக்கம் நயன்தாரா இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், அடுத்து சமந்தா அதை போலவே ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சில நாட்களாக சிகிச்சை காரணமாக சோஷியல் மீடியாவில் இருந்த சமந்தா மீண்டும் ஆக்டிவாகி உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அரியவகை
சரும
நோய்..சிகிச்சை
முடிந்தது?
விரைவில்
இந்தியா
திரும்பும்
சமந்தா!

நாக சைதன்யாவை பிரிந்த நிலையில்
ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் திடீரென விவாகரத்து செய்து பிரிந்தது ரசிகர்களை, பிரபலங்களை மற்றும் சமந்தா, நாக சைதன்யாவின் குடும்பத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியது. அந்த பிரிவு வலி தாங்க முடியாமல் நாக சைதன்யாவும் சமந்தாவும் வாடி வருவதையும் காண முடிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆளயே காணோம்
சமந்தா கணவரை விட்டு பிரிந்ததும் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தியும், மது நிறுவன விளம்பரங்களில் நடித்தும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆனால், திடீரென சோஷியல் மீடியா பக்கமே சமந்தாவை காணவில்லையே என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்த நிலையில், வெறும் யசோதா படத்தின் அறிவிப்பு மற்றும் சகுந்தலம் படத்தின் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

தனிமையில் வாடுகிறாரா சமந்தா
இந்நிலையில், தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் சமந்தா பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது. முகத்தைக் கூட காட்டாமல் வெறும் டிசர்ட்டில் உள்ள வாசகத்தை மட்டுமே ஹைலைட் செய்து சமந்தா காட்டிய நிலையில், அவர் தனிமையில் வாடி வருகிறாரா? என்கிற கேள்வி கிளம்பி உள்ளது.

அப்படி என்ன எழுதியிருக்கு
YOU'LL NEVER WALK ALONE என்கிற டிசர்ட் வாசகத்தை போட்டோ எடுத்து காண்பித்துள்ள சமந்தா, அதற்கு கேப்ஷனாக In case you needed to hear this as well.. YOU'LL NEVER WALK ALONE என்றும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் அவர் தனிமையில் வாடுகிறாரா? அல்லது இனிமேல் தனிமையில் வாட போவதில்லை என்பதை சூசகமாக சொல்கிறாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

நான் கூட வரவா
சமந்தாவின் இந்த போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சில ஆபாச கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தனிமையில் வாடும் சமந்தாவுக்கு துணையாக நான் வேணா கூட வரவா என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

அடுத்த திருமணத்துக்கு ரெடியா?
யாரும் தனியாக நடந்து செல்வதில்லை என்கிற டிசர்ட் வாசகத்தை காட்டியிருக்கும் சமந்தா, அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா? அதற்கான சிக்னலா இது? என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதற்கு முன்பாகவும் இப்படித்தான் தனது பெயரில் இருந்த அக்கினேனி முதல் ஆளாக தூக்கி எறிந்தார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.