»   »  ஹீரோவாகும் "டிஎஸ்பி"... முதல் படத்திலேயே சமந்தாவுடன் ஜோடி!

ஹீரோவாகும் "டிஎஸ்பி"... முதல் படத்திலேயே சமந்தாவுடன் ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்குப் படத்தில் ஹீராவாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் நாயகர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில், தமிழில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெற்றிப் படங்களைத் தந்து வருகின்றனர்.

தற்போது அந்த வரிசையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சேர்ந்துள்ளார்.

ஒரு நாயகன் உதயமாகிறான்...

ஒரு நாயகன் உதயமாகிறான்...

ஆனால், டிஎஸ்பி என சுருக்கமாக அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாவது தமிழில் அல்ல, தெலுங்கில். பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சமந்தா ஜோடி...

சமந்தா ஜோடி...

சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் டிஎஸ்பிக்கு ஜோடியாக சார்மி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது டிஎஸ்பிக்கு நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னணி இசையமைப்பாளர்...

முன்னணி இசையமைப்பாளர்...

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளார். இவர் இசையமைத்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அடுத்து தமிழ் தான்...

அடுத்து தமிழ் தான்...

இந்தச் சூழ்நிலையில் தெலுங்கில் நாயகனாக அரிதாரம் பூச இருக்கிறார் இவர். தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் விரைவில் நாயகனாக இவரது அதிரடி பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tollywood actress Samantha is all set to feature opposite music director Devi Sri Prasad in a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil