அப்போ தடை செய்யலையா? சமந்தாவின் சர்ச்சைக்குரிய வெப் தொடர்.. திட்டமிட்டபடி நள்ளிரவில் ரிலீஸ்!
சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்த நிலையில், எந்தவொரு தங்கு தடையுமின்றி திட்டமிட்டபடி அந்த வெப் தொடர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன் இரண்டாம் சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் காத்திருக்கின்றனர். தற்போது #TheFamilyMan2 ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தடையின்றி
ஈழத் தமிழர்களையும் விடுதலை புலிகள் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த வெப் தொடருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்தன. வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசும் தடை கோரியது. ஆனால், ஒடிடி ரிலீஸ் என்பதால் எந்தவொரு தங்குதடையுமின்றி அந்த வெப் தொடர் வெளியாக உள்ளது.

சமந்தாவுக்கு சப்போர்ட்
இந்த வெப் தொடரில் ராஜி எனும் ஈழப் பெண்ணாக நடிகை சமந்தா நடித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக ஷேம் ஆன் யூ சமந்தா என்கிற ஹாஷ்டேக் நேற்று டிரெண்டானது. ஆனால், இன்று காலை முதலே சமந்தாவுக்கு சப்போர்ட் செய்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

இயக்குநர்கள் உருக்கம்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வெப் தொடருக்காக கடும் உழைப்புகளை போட்டுள்ளோம் என இந்த வெப் தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து தற்போது ஒரு ட்வீட் போட உடனடியாக #TheFamilyMan2 ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இனி உங்கள் கையில்
இன்று இரவு 12 மணிக்கு திட்டமிட்டபடி தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியாகிறது. இது உங்களுடைய தொடர், இனி எல்லாம் உங்கள் கையில் என இந்த வெப் தொடரில் ஹீரோ ஸ்ரீகாந்த் திவாரியாக நடித்துள்ள மனோஜ் பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.

சமந்தா சைலன்ட்
ஏற்கனவே எதிர்ப்புகள் எல்லை மீறி சென்றுள்ள நிலையில், வெப் தொடர் வெளியாகும் வரை வாய் திறக்க வேண்டாம் என நினைத்து விட்டாரோ சமந்தா தெரியவில்லை. இது தொடர்பாக படக்குழுவினர் ட்வீட் போட்டு வரும் நிலையில், இதுவரை எந்த ஒரு கருத்தையும் நடிகை சமந்தா வெளியிடவில்லை.

தமிழிலும்
முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் ஸ்ரீகாந்த் திவாரி இந்த முறையும் நாட்டையும் குடும்பத்தையும் காப்பாற்றுகிறாரா? பிரியாமணிக்கும் அவரது நண்பருக்கும் என்ன நேர்ந்தது என ஏகப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம்.

ராஜி வரா
சமந்தா இந்த வெப் தொடரில் ராஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீசனிலேயே டெல்லியை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி காப்பாற்றினார் என்பதை காட்டாமல் அப்படியே விட்டு விட்டனர். இதில், சமந்தா ஈழத் தமிழ் பெண்ணாக வேறு வருகிறார். வெப் தொடர் எப்படி இருக்கப் போகிறதோ? என்ன என்ன எதிர்ப்புகள் வரப் போகிறதோ என்பது விரைவில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











