யசோதா பாக்ஸ் ஆபிஸ்… இரண்டாவது நாளிலும் வசூலில் கோடிகளை குவித்த சமந்தா

ஐதராபாத்: சமந்தா நாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியான யசோதா படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

யசோதா படத்தில் நடிப்பிலும் ஆக்சனிலும் மிரட்டியுள்ள சமந்தாவிற்கு ரசிக்ர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தாவின் யசோதா

சமந்தாவின் யசோதா

யசோதா படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கில் உருவாகி இருந்தாலும், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியானது. சமந்தா லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இணைந்து இயக்கியுள்ளனர். டீசர், ட்ரெய்லர் மூலமாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த யசோதா இப்போது திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் இரண்டாம் நாள்

பாக்ஸ் ஆபிஸ் இரண்டாம் நாள்

யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த சமந்தா, சில இடங்களில் எமோஷனல் ஆகி அடிக்கடி கண் கலங்கினார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான யசோதா பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. முதல் நாளில் 4 கோடி ரூபாய் வரை வசூலித்த யசோதா, இரண்டாம் நாளில் 5 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் மொத்தம் 10 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

அமெரிக்கா, மலேஷியாவில் வரவேற்பு

அமெரிக்கா, மலேஷியாவில் வரவேற்பு

தமிழ்நாட்டில் மழை காரணமாக யசோதா படத்திற்கான டிக்கெட் புக்கிங் கொஞ்சம் டல்லடித்தாலும், ஆந்திரா, மும்பை, டெல்லி உட்பட மற்ற இடங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் யசோதா படம் இரண்டு நாட்களில் 80 லட்சம் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மலேஷியாவில் இந்த வாரம் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் 10 படங்களில் யசோதாவும் இடம்பெற்றுள்ளது. இதனால், மலேஷியாவிலும் யசோதா படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம்.

வாடகைத் தாயான சமந்தா

வாடகைத் தாயான சமந்தா

யசோதா படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ள சமந்தா, ரொம்பவே சென்சிட்டிவான கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். அதேபோல், ஆக்சன் காட்சிகளிலும் அதகளம் செய்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். தியேட்டரில் வெளியாகும் முன்பே யசோதா படம் ப்ரீ ரிலீஸ் மூலமாகவும் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X