“யசோதா யாருன்னு தெரியும்ல”… சமந்தா ரசிகர்களுக்காக வெளியான தீபாவளி சர்ப்ரைஸ் அப்டேட்…

ஐதராபாத்: சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யசோதாவில் சமந்தா தான் முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு யசோதா படத்தில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமந்தா கர்ப்பம்

சமந்தா கர்ப்பம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த சமந்தா, இப்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து யசோதா, குஷி, சாகுந்தலம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் யாசோதா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. அதன்படி இந்தப் படம் நவம்பர் 11ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் சமந்தா கர்ப்பிணியாக நடித்துள்ளார். அதன் பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக யசோதா உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பான் இந்தியா யசோதா

பான் இந்தியா யசோதா

ஹரீஷ் நாராயண், கே. ஹரி ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள யசோதா, பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளாம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத்ராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். ஏற்கனவே யசோதா படத்தின் டீசர் வெளியாகி செம்ம திரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸை கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளி அப்டேட்

தீபாவளி அப்டேட்

இன்று தீபாவளி என்பதால், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக யசோதா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி யசோதா ட்ரெய்லர், வரும் 27ம் தேதி மாலை 5.36 மணிக்கு வெளியாகிறது. "யசோதா யாருன்னு தெரியும்ல" என்ற சின்ன க்ளிம்ப்ஸுடன் வெளியான இந்த ட்ரெய்லர் அப்டேட், சமந்தா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், விரைவில் பாடல்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சாகுந்தலம், குஷி

சாகுந்தலம், குஷி

யசோதா ட்ரெய்லர் வெளியானது இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் சமந்தா கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதனை முடித்துவிட்டு சாகுந்தலம், குஷி ஆகிய படங்களின் எஞ்சிய பகுதிகளையும் ஃபினிஷ் செய்ய சமந்தா திட்டமிட்டுள்ளாராம். அதன்பின்னர் புதிய படங்களில் நடிப்பது குறித்தும் அவர் முடிவெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா படத்தின் செகண்ட் பார்ட்டில், சமந்தாவுக்கு பதிலாக தமன்னாவை ஐட்டம் பாடலுக்கு நடனமாட வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X