மகேஷ் பாபுலாம் வாழ்த்திட்டாரு.. எக்ஸ் மாமனார் நாகார்ஜுனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வாரா சமந்தா?

ஹைதராபாத்: நாக சைதன்யாவை போலவே அவரது அப்பா நாகார்ஜுனாவும் சென்னையில் பிறந்தவர் தான்.

தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா டோலிவுட்டில் டாப் நடிகராக தனது 63வது வயதிலும் அதிரடி காட்டி வருகிறார்.

நாகார்ஜுனா பிறந்தநாளுக்காவது சமந்தா வாழ்த்து சொல்வாரா என எதிர்பார்த்த நிலையில், இன்னமும் அவர் சொல்லவில்லை என்பது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

நாகார்ஜுனா பிறந்தநாள்

நாகார்ஜுனா பிறந்தநாள்

டோலிவுட்டின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா இன்று தனது 63வது பிறந்தநாளை மனைவி அமலா அக்கினேனி மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். 1986ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் நாகார்ஜுனா. தமிழில் ரட்சகன், பயணம் மற்றும் தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜுனா இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

மகேஷ் பாபு வாழ்த்து

மகேஷ் பாபு வாழ்த்து

ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாகார்ஜுனா ரசிகர்கள் நடிகர் மகேஷ் பாபுவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா வாழ்த்தல

சமந்தா வாழ்த்தல

நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டாலும், மாமனார் நாகார்ஜுனா உடன் நடிகை சமந்தாவுக்கு எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில், அவரது பிறந்தநாளுக்கு இன்னும் ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என்றும் வாழ்த்துவாரா? மாட்டாரா என்றும் கேள்விகளை நாகார்ஜுனா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மாமனாருக்கு பதிலாக

மாமனாருக்கு பதிலாக

மாமனாருக்கு பதிலாக முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4ன் 50வது நாள் எபிசோடையே நடிகை சமந்தா தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஒற்றுமையாகவும் நட்பாகவும் இருந்தவர்கள் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு பேசிக் கொள்வது கூட இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரம்மாஸ்திரம் வருது

பிரம்மாஸ்திரம் வருது

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பாலிவுட்டில் பாய்காட் டிரெண்டிங் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X