Don't Miss!
- News
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் சமந்தா...யாருக்கு ஜோடி தெரியும்?
சென்னை : தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரிடம் பாலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.
கடந்த ஓராண்டாகவே சமந்தா தான் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறார். சமந்தாவின் விவாகரத்து பற்றிய வதந்திகள் பரவ துவங்கியது முதலே சமந்தா பற்றிய எந்த தகவல் வெளிவந்தாலும் உடனடியாக அது வைரலாகி விடுகிறது.
நாக சைதன்யா - சமந்தாவின் பிரிவு பற்றிய பேச்சுக்கள் முடிவதற்குள், புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம், சோஷியல் மீடியாக்களில் ஓவர் கிளாமர் போட்டோஷுட் என சமந்தா பற்றிய விஷயங்கள் ஏதாவது ஒன்று வெளியாகி வைரலாவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தியன்
2
விற்காக
ஷங்கர்
செய்ய
போகும்
காரியம்...அதிர்ச்சியில்
ரசிகர்கள்

அக்ஷய் குமாருடன் ஆட்டம்
சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, அக்ஷய் குமாருடன் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி பரபரப்பை கிளப்பினார். அதோடு தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கணவர் நாக சைதன்யா பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

மல்லுவுட்டில் என்ட்ரியாகும் சமந்தா
இந்நிலையில் தற்போது சமந்தா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. டோலிவுட், கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து அடுத்ததாக மல்லுவுட்டிலும் சமந்தா என்ட்ரி கொடுக்கிறார். மலையாளத்தில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

சமந்தாவின் அடுத்த படம்
சமந்தா - துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கு King of Kotha என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் அபிலாஷ் ஜோஷி இயக்கும் இந்த படம் கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டது என சொல்லப்படுகிறது.

வரிசையாக எத்தனை படங்கள்
கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த சமந்தா, சயின்ஸ் ஃபிக்சிங் த்ரில்லர் படமான யசோதா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர் குணசேகர் இயக்கும் சாகுந்தலம் படத்திலும் சமந்தா லீட் ரோலில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் செம பிஸி
துல்கர் சல்மான், கடைசியாக தெலுங்கில் சீதா ராமம் படத்தில் நடித்தார். ரொமான்டிக் படமாக இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில் மிருனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெப் சீரிஸ் சிலவற்றிலும் துல்கர் சல்மான் நடிக்கிறார்.