For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சமந்தா ரிஸ்க் எடுத்து நடிச்சாங்களே, அதெல்லாம் என்னாச்சு?: சாகுந்தலம் படத்துக்கு வந்த சோதனையா இது?

  |

  ஐதராபாத்: தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் சமந்தா.

  நாக சைத்தன்யாவை பிரிந்த பிறகு இன்னும் விஸ்வரூபமெடுத்துள்ள சமந்தா, தற்போது 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

  இந்தப் படத்தில் சமந்தா ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஏமாந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

  வெற்றி நாயகன் அஜித்...துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை தட்டி தூக்கிய அஜித்...கொண்டாடும் ரசிகர்கள் வெற்றி நாயகன் அஜித்...துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை தட்டி தூக்கிய அஜித்...கொண்டாடும் ரசிகர்கள்

  ரசிகர்களின் பொன்வசந்தம்

  ரசிகர்களின் பொன்வசந்தம்

  மிகச் சாதாரணமாக சினிமாவில் அறிமுகமான சமந்தா, மெல்ல மெல்ல தனது கேரியரில் உச்சம் தொட்டார். அதுவும் நாக சைத்தன்யாவுடனான காதல், திருமணம் அவரை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. அழகு பதுமையாகவும், நடிப்பில் கில்லியாகவும் ஸ்கோர் அடித்த சமந்தாவை, ரசிகர்கள் பொன்வசந்தமாக கொண்டாடி வந்தனர்.

  கோலிவுட் டோலிவுட் இரண்டிலும் டாப்

  கோலிவுட் டோலிவுட் இரண்டிலும் டாப்

  நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே டாப் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என மெகா ஹீரோக்களுடன் டூயட் பாடி செட்டில் ஆகிவிட்டார். அதேபோல், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் நாயகியாக தனி இடம் பிடித்தார். இதனால், கோலிவுட் டோலிவுட் இரண்டிலுமே டாப் நடிகையானார் சமந்தா.

  நாகசைத்தன்யாவுடன் பிரேக் அப்

  நாகசைத்தன்யாவுடன் பிரேக் அப்

  நாக சைத்தன்யாவுடன் காதல், திருமணம் என அனைவரையும் பிரமிக்க வைத்த சமந்தா, அவரை பிரிவதாகவும் அறிவித்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்தார். ஆனாலும், சினிமாவில் இன்னும் நெருப்பாக வெடித்துச் சிதறிய சமந்தா, கவர்ச்சியிலும் ரசிகர்களை கலங்கடித்தார். அதன் பலனாக பாலிவுட் வரையிலும் தடம் பதித்தார்.

  பிரமாண்டமாக உருவாகும் சாகுந்தலம்

  பிரமாண்டமாக உருவாகும் சாகுந்தலம்

  ரொமாண்டிக் ஹீரோயின், ஒரேயொரு பாட்டுக்கு குத்தாட்டம் என கலந்துக்கட்டினாலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் சரியாக தேர்வு செய்தார். அப்படி உருவாகி வருவதே 'சாகுந்தலம்' திரைப்படம், காளிதாசனின் பிரபலமான நாடகமான சகுந்தலாவை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இது, ரொம்பவே பிரமாண்டமாக இருக்கும் என டீசரிலேயே தெரிந்தது.

  சமந்தா எடுத்த ரிஸ்க்

  சமந்தா எடுத்த ரிஸ்க்

  இந்நிலையில், 'சாகுந்தலம்' படத்திற்காக சமந்தா ரொம்பவே ரிஸ்க் எடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் புராணக் கதையாக உருவாகுவதால், ஆக்சன் காட்சிகளில் சமந்தா படு மிரட்டலாக நடித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சமந்தா எடுத்த ரிஸ்க்கை பார்த்து படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம். இதனால் இந்தப் படம் தனக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுக்கும் என சமந்தா எதிர்பார்த்திருந்தார்.

  சமந்தா ஏமாற்றம்

  சமந்தா ஏமாற்றம்

  சமந்தாவுடன் அதித்தி பாலன், மோகன் பாபு ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இந்நிலையில், 'சாகுந்தலம்' படத்தை பார்த்த சமந்தா, மேக்கிங் சொதப்பிவிட்டதாகவும், இதனால் ரிஸ்க் எடுத்து நடித்ததெல்லாம் வேஸ்டாகிவிட்டதே என ஏமாற்றத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

  படக்குழுவின் விளக்கமும்

  படக்குழுவின் விளக்கமும்

  ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடந்து வருவதாகவும், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால், சமந்தாவின் அதிருப்தி குறித்த செய்திகளெல்லாம் வதந்தி எனவும் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சீக்கிரமே தரமான அப்டேட்டுடன் திரும்பி வர்றோம் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சமந்தாவின் ரசிகர்கள் இப்போதைக்கு கூல் ஆகியுள்ளனர்.

  English summary
  Samantha unhappy with Gunasekhar's mythological film Shaakuntalam's final output?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X