நாகசைதன்யாவை unfollow செய்த சமந்தா...பதிலுக்கு நாகசைதன்யா செய்த காரியம்
ஐதராபாத் : நாக சைதன்யாவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து unfollow செய்துள்ளார் நடிகை சமந்தா. இதற்கு பதிலுக்கு நாக சைதன்யா செய்துள்ள காரியம் தான் அனைவரும் ஆச்சரியப்படவும், அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளது.
தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சீசாவே படத்தில் இணைந்து நடித்த போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து 2017 ம் ஆண்டு கோவாவில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

6 மாதங்களாக டிரெண்டிங்
திருமணத்திற்கு பிறகும் இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். இவர்கள் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்ததில் இருந்து கடந்த 6 மாதங்களாக இவர்களைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என பலரும் பலவிதமாக கூறி வந்தனர். ஆனால் உண்மையான காரணம் என்னவென்று தற்போது வரை யாருக்கும் தெரியாது.

ஓவர் கிளாமருக்கு மாறிய சமந்தா
சமந்தாவோ விவாகரத்திற்கு பிறகு அதீத கவர்ச்சி காட்டிய போட்டோக்களை விடாமல் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அனைவரையும் அதிர வைத்து வருகிறார். ஆனால் விவாகரத்து பற்றி நாக சைதன்யாவிடம் கேட்ட போது, அவருக்கு எது சந்தோஷமோ அது தான் எனக்கும் சந்தோஷம். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள் என கூலாக பதிலளித்தார்.

என்ன செய்தாலும் டிரெண்டிங்
இதற்கிடையில் சமந்தா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்தார். சமீபத்தில் திருமண புடவையையும் திருப்பிக் கொடுத்தார். இப்படி சமந்தா செய்யும் ஒவ்வொன்றும் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. அவரும் ஏதாவது செய்து மீடியாக்களின் ஒட்டுமொத்த கவனமும் தன்பக்கம் இருப்பது போல் செய்து வருகிறார்.

unfollow செய்த சமந்தா
தற்போது தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவை unfollow செய்துள்ளார். இதனால் நாக சைதன்யா மீது சமந்தாவிற்கு அப்படி என்ன கோபம்...இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரே என நெட்டிசன்ககள் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் பதிலுக்கு நாக சைதன்யாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அனைவரிடமும் அதிகரித்தது.

நாக சைதன்யா என்ன செய்தார்
நாக சைதன்யா இதை எப்படி சமாளிக்க போகிறார் என பார்த்தால், பதிலுக்கு அவரும் சமந்தாவை unfollow செய்துள்ளார். நல்ல நட்பு உள்ளது என சொன்ன இவருமா இப்படி செய்துள்ளார் என அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள். திருமண உறவு தான் இல்லை என பார்த்தால், இவர்களுக்குள் நட்பு கூட இல்லையா என பலர் நொந்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











