For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "பர்னிங் ஸ்டார்" சம்புவின் பரபரக்கும் சிங்கம் 123... விரைவில் தமிழிலும் கர்ஜிக்கும்!

  By Manjula
  |

  ஹைதராபாத்: தெலுங்கு நடிகர்களின் உருவம்தான் மாஸாக இருக்கும் என்றால் அவர்களின் பட்டப் பெயர்கள் படா மாஸாக இருக்கும்.

  "மெகா பர்னிங் ஸ்டார்" சம்புவின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா, பார்க்கவில்லை எனில் ஒருமுறை அவரின் படங்களை பாருங்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டீர்கள்.

  மனிதரின் நடிப்பில் ஆந்திராவே அதிர்ந்து கொண்டிருக்கிறது, ஆமாம் அந்த அளவுக்கு சக நடிகர்களின் படங்களை சகட்டுமேனிக்கு கிண்டலடித்து படங்களை எடுத்து வருகிறார்.

  சம்புவின் முழுப்பெயர் சம்பூர்னேஷ் பாபு தனது முதல் படமான ஹ்ருதய கலேயம் திரைப்படத்தில் தெலுங்கு சினிமாக்களை கதறக்கதற .. தப்பா நினைக்காதீங்க.. கிண்டலடித்து இருந்தார். இவன் கொஞ்சம் வித்தியாசமா நடிக்கிறானே என்று ஆந்திர மக்கள் அந்தப் படத்தைப் பார்த்து ஹிட்டாக்கித் தொலைக்க, வந்தது வினை.

  Sampoornesh Babu Singham 123 Dubbed In Tamil

  ஆமாம் தமிழில் சூர்யாவின் அந்தஸ்தை உயர்த்திய சிங்கம் படங்களையும், தெலுங்கு போலீஸ் படங்களையும் கிண்டல் செய்து சிங்கம் 123 என்ற படத்தில் நடித்தார். படம் தற்போது ஆந்திராவில் வெளியாகி பெரிய நடிகர்களின் படங்களின் அளவுக்கு வசூலில் கல்லா காட்டுகிறதாம்.

  என்னதான் வாட்ஸ் ஆப்பில் கண்டபடி கலாய்த்தாலும், அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து அடுத்தவர்களின் படங்களைத் தாளித்துக் கொண்டிருக்கிறார் சம்பு.

  அவரின் புகழ் பெற்ற படங்களின் வசனங்களை ஒருமுறை கேளுங்கள் ( மண்டையைக் கொண்டு போய் சுவத்தில் முட்டிக் கொண்டால் நாங்க பொறுப்பில்லை!

  ஹ்ருதய கலேயம்

  அந்தத் தைரியத்துக்கே பயம் வந்தா, என் போட்டோவைத்தான்டா தலையணைக்கு அடியில் வெச்சுட்டுத் தூங்கும்!',

  'காசு கொடுத்து வாங்க அவன் ஷாம்பூ இல்லடா... சம்பூ',

  'நான் கத்தி எடுத்து வெட்ட ஆரம்பிச்சா, பொணத்த அள்ளிட்டுப் போக பொக்லைன்தான் வரணும்

  இவை ஹ்ருதய கலேயம் படத்தின் பன்ச் வசனங்களில் சில, படம் முழுவதுமே பன்ச் பேசி பார்த்தவர்களைக் கொன்றிருந்தார் சம்பு.

  சிதையில் இருந்து மீண்டு வரும் சம்பூ

  வில்லன்களால் அடித்து துவைக்கப்பட்டு, முதுகில் மிகப்பெரிய கோடாரி ஒன்றால் வெட்டப்பட்டு இறந்து போகும் ஹீரோ சம்பூர்னேஷை சிதையில் எரிக்கும்போது.... ஹீரோயினை வில்லன்கள் டார்ச்சர் செய்ய, அவர் ‘‘சம்பூ....'' என கத்துவார். அந்த ஒலி நேரடியாக எரிந்து கொண்டிருக்கும் சம்பூர்னேஷின் காதுகளுக்குள் புகுந்து இதயத்தை அடைந்து மீண்டும் உயிர் வர, சிதையிலிருந்து வெளிவந்து முதுகில் குத்தியிருக்கும் கோடாரியை எடுத்து வில்லன்களை பந்தாடுவார் நம்ம சம்பூ! இப்படி... இதுவரை இந்திய சினிமா கதாநாயகர்கள் செய்யாத ஒரு சாதனையைச் செய்தவர்தான் இந்த சம்பூர்னேஷ் பாபு. நம்ம ஊர் ‘பவர்ஸர்டார்' சீனிவாசனுக்கெல்லாம் குரு இவர்தான் என அகில உலகமே ‘ஹ்ருதய கலேயம்' படத்தைப் பார்த்த பிறகு மண்டியிட்டு ஒப்புக்கொண்டது.

  சிங்கம் 123

  உச்சகட்ட காமெடி இந்தப் படத்தில் தான் இந்த பன்ச் வசனங்களை ஒருமுறை படியுங்கள், வாழ்க்கை முழுவதுமே சம்புவின் தீவிர ரசிகனாகி விடுவீர்கள்.

  நான் பொறந்தப்பவே போலீஸ் டிரஸ்ஸோடு பொறந்தவன்டா

  பெண்களுக்கு ஆபத்து என்றால் அரைமணி நேரம் லேட்டாத்தான் வருவேன், ஆண்களுக்கென்றால் அரை நொடியில் வருவேன்.

  நான் அடிச்சா அடிவாங்கினவன் ஒண்ணு கோமாவுல இருப்பான் இல்லேன்னா மார்சுவரியில இருப்பான்.

  நான் கொசுடா, கொசு தாகம் எடுத்தாலும் ரத்தம்தாண்டா குடிக்கும்.

  எமனுக்கு ரெஸ்ட் வேணும்னுதான் எண்கவுண்டரை நிறுத்தி வச்சிருக்கேன்டா.

  எமோசனோட டூயூட்டி பார்த்தா புரமோசன் தானா வரும்டா.

  ஆந்திராவில் இறந்து ஆப்பிரிக்காவில் உயிர்த்தெழும் சம்பூ

  சிங்கம் 123 படத்தில் சம்பூவை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள வில்லன்கள். சம்பூவின் மரணம் தாங்காமல் ஆந்திராவே கதறி அழும்போது, ஆப்பிரிக்கக் கடலில் இருந்து உயிருடன் எழுந்து வருவார் சம்பூ. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் நீங்க.

  தமிழில் விக்ரமுடன்

  தமிழில் பவர் ஸ்டார் மற்றும் சோலார் ஸ்டார் ஆகியோருக்கு போட்டியாக ஆந்திராவில் தோன்றியிருக்கும் பர்னிங் ஸ்டார் சம்பூ தற்போது விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் சேர்ந்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை டப் செய்து ஆந்திராவிலும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆந்திராவில் விக்ரமுக்கு மார்க்கெட் இல்லையே என்று புருவம் உயர்த்தாதீர்கள், சம்புவிற்கு ஆந்திராவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான் சம்பு தற்போது தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்.

  சிங்கம் 123 இப்போது தமிழிலும்

  விஜயகாந்த், சூர்யா மற்றும் தெலுங்கு போலீஸ்ஹீரோக்கள் என அனைவரையும் ஒருசேரக் கலாய்த்த சிங்கம் 123 படத்தை தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டு உள்ளனராம். அது வருது எல்லோரும் ஓடுங்க.....செத்தாண்டா சேகரு!

  English summary
  Sampoornesh Babu is an Indian film actor who works predominantly in South Indian cinema.He made his acting debut through the 2014 telugu film Hrudaya Kaleyam. Now The Rumor is His Latest Movie Singham 123, direct dubbed in tamil.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X