Don't Miss!
- News
தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நஷ்டம் மட்டும் 100 கோடிக்கு மேல்.. படு தோல்வி அடைந்த “சாம்ராட் பிருத்விராஜ்“
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள சாம்ராட் பிருத்விராஜ் ரூ100 கோடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், படம் பெரும் தோல்வியைத் தழுவி உள்ளது.
கடந்த வாரம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இத்திரைப்படத்திற்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டன.
ஆனால், குவைத் , ஓமன் போன்ற நாடுகளில் சாம்ராட் பிருத்விராஜ் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
மிரட்டத்
தயாராகும்
பாலிவுட்
விக்ரம்
-வேதா..
பொன்னியின்
செல்வனோட
மோத
தயார்!

சாம்ராட் பிருத்விராஜ்
மன்னர் சாம்ராட் பிருத்விராஜ் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாம்ராட் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். பிருத்விராஜின் மனைவியாக, முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லர் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

முக்கிய ரோலில்
இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, சாக்ஷி தன்வார் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு வார வசூல் ரூ.55 கோடி
ஜூன் 3ந் தேதி வெளியான இத்திரைப்படம் வாரத்தில் ரூ.55 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.10.70 கோடியும், சனி ரூ.12.60 கோடி, ஞாயிறுக்கிழமை ரூ.16.10 கோடி, திங்கட்கிழமை 5 கோடி, செவ்வாய் 4.25 கோடி, புதன் 3.60 கோடியும், ஒரு வாரத்தில் மட்டும் 52.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நஷ்டம் மட்டும் 100 கோடிக்கு மேல்
சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஒரு சரித்திரத்திரைப்படம். இப்படத்தில் அக்ஷய் குமாரின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டி இருந்தார்கள். இப்படம் பாஸ் ஆபிசில் நிச்சயம் கல்லா கட்டும் என எதிர்பார்த்த நிலையில், செலவு செய்ததில் கால்பாதி கூட வசூலாகாததால் படக்குழுவினர் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சோகத்தில் ரசிகர்கள்
படம் வெளியான ஒருவாரத்திற்குள்ளேயே திரையரங்குக்கு ஆட்கள் வராததால் நேற்று பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடித்த படம் ஒரு வாரத்திற்குள்ளேயே திரையரங்கில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.