»   »  நடிப்புச் சமுத்திரத்தின் ஒரு துளி.. இந்த சமுத்திரக் கனி..!

நடிப்புச் சமுத்திரத்தின் ஒரு துளி.. இந்த சமுத்திரக் கனி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் இட்லி போல திடீர் நடிகர்கள் இப்போது சகஜம். ஆனால் அட்டகாசமான நடிப்புத் திறமையுடன் கூடிய திடீர் நடிகர்கள் பிரமிக்க வைப்பார்கள். அப்படிப்பட்ட அரிதிலும் அரிதான நடிகர்களில் ஒருவர்தான் இயக்குநர் சமுத்திரக்கனி.

இவர் நடிப்பதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது.. காரணம் இவர் இருந்து வந்த பட்டறை அப்படி.. "கேபி" கேம்ப்பிலிருந்து வந்தவர் சமுத்திரக்கனி. பிறகு எப்படி நடிக்காமல் இருக்க முடியும். கல்லையும் கவிதை பாட வைக்கும் சிற்பியாயிற்றே கேபி.

கேபியின் சிஷ்யராக இருந்தாலும் கூட சினிமாவில் தனது இடத்தைப் பிடிக்க சமுத்திரக் கனி போராட வேண்டியிருந்தது. இயக்குநராக தன்னை நிரூபிக்க ரொம்பவே போராடினார் சமுத்திரக்கனி

டிவியில்தான் தனது திறமையை முதலில் நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டிவியில் தனது முத்திரையைப் பதித்த சமுத்திரக்கனி சினிமாவில் தனது தடத்தைப் பதிக்க சரியான தருணத்திற்காக காத்திருந்தார்.. கொக்கு போல.

நடிக்கவே ஆசை

நடிக்கவே ஆசை

உண்மையில் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் இருந்தாராம் சமுத்திரக்கனி. ஆனால் உன் முகம் அதுக்கேத்த மாதிரி இல்லையே என்று பலரும் கூறவே நடிப்பை விட்டு விட்டு இயக்குநராகும் வேலையில் இறங்கினார் சமுத்திரக்கனி.

அண்ணி - அரசி - செல்வி

அண்ணி - அரசி - செல்வி

இவரது கைவண்ணத்தில் ரமணி வெர்சஸ் ரமணி, அண்ணி, அரசி, செல்வி ஆகிய டிவி சீரியல்கள் மிகப் பிரபலமானவை, டிரெண்ட் செட்டராக அமைந்தவை.

டப்பிங் பேசி, பாட்டுப் பாடி

டப்பிங் பேசி, பாட்டுப் பாடி

இயக்குநராக மட்டுமல்லாமல் பாடகராக இரு படங்களில் குரல் கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி. டப்பிங் பேசியுள்ளார். ஆடுகள்ம் படத்தில் கிஷோருக்குக் குரல் கொடுத்தவர் சமுத்திரக்கனிதான்.

நடிகராக

நடிகராக

நடிகராக இவருக்கு சுப்பிரமணியபுரம் பெரிய பிரேக்காக அமைந்தது. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வில்லன் நடிகர் கிடைத்திருப்பதை அது கட்டியம் கூறியது.

ரஜினி முருகனில் செம ரகளை

ரஜினி முருகனில் செம ரகளை

அதன் பிறகு நடிப்பு, இயக்கம் என மாறி மாறி செயல்பட்டு வந்த சமுத்திரக்கனிக்கு ரஜினி முருகன் டாப்மோஸ்ட் ஹிட்டாக அமைந்தது. சமுத்திரக்கனியின் சிலம்பலான நடிப்பை பார்த்து ரசிக்காதவர்களே கிடையாது. பாராட்டுக்களை வாரிக் குவித்தார் சமுத்திரக்கனி.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இயக்குநரா, டப்பிங் கலைஞராக, பாடகராக, நடிகராக பல அவதாரம் பூண்டவரான சமுத்திரக்கனிக்கு இன்று நடிப்புக்காக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உண்மையான உழைப்புக்குக் கிடைத்த உயர்வான அங்கீகாரம் இது... வாழ்த்துகள்!

English summary
Director and actor Samuthirakani has been rewarded with a national award for his acting in Visaranai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil