»   »  அவனைத்தான் தேடிகிட்டு இருக்கேன்!- சமுத்திரகனியை டென்ஷனாக்கிய போலி ட்விட்டர்

அவனைத்தான் தேடிகிட்டு இருக்கேன்!- சமுத்திரகனியை டென்ஷனாக்கிய போலி ட்விட்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய சூழலில் ட்விட்டர் என்பது கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளியை குறைத்துவிட்டது. கலைஞர்களும் தங்கள் பட அறிவிப்பு, போஸ்டர் என எல்லாவற்றையுமே அதன் மூலம் தான் வெளியிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வெளியாகும் படங்களின் வெற்றி, தோல்வியையே நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டன சமூக வலைதளங்கள். ஆனால் அவற்றால் பிரபலங்களுக்கு விளையும்

இன்னல்களும் ஏராளம். அந்த வரிசையில் நேற்று மாட்டியவர் சமுத்திரகனி.

samuthirakani fury on fake twitter ID

சமுத்திரகனி பெயரில் இருந்த ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்றில் இருந்து ஒரு ட்விட் வெளியானது. அதில், "நான் அமலாபாலுக்கு சப்போர்ட் செய்கிறேன். ஒரு பெண் திருமணத்துக்கு பிறகு நடிப்பது என்பது அவரது விருப்பம். சூர்யாவைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்,'' என்று இயக்குநர் விஜய்யை குற்றம் சாட்டி

ஒரு ட்விட்டர் வர, பரபரப்பானது திரையுலகம்.

சமுத்திரகனியிடமே இதுபற்றிக் கேட்டால், "எவன் போட்டான்னு தான் தம்பி தேடிட்டு இருக்கேன். என்னோட ஒரிஜினல் ட்விட்டர் ஐடி வேற. அது போலி,'' என்று விளக்கம் சொன்னார்.

அமலாபால் நடிக்க வந்ததால்தான் நாங்கள் பிரிகிறோம் என்று விஜய் இதுவரை சொல்லவில்லை. எனவேதான் இந்த ட்விட்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
A fake ID in the name of director Samuthirakkani has supported Amala Paul and criticised director Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil