»   »  பார்த்திபனின் 'உள்ளே வெளியே 2' படத்தில் ஹீரோ இவரா?.. காம்போவே மெர்சல்!

பார்த்திபனின் 'உள்ளே வெளியே 2' படத்தில் ஹீரோ இவரா?.. காம்போவே மெர்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பார்த்திபனின் 'உள்ளே வெளியே 2' - சமுத்திரக்கனி ஹீரோ- வீடியோ

சென்னை : பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான படம் 'உள்ளே வெளியே'. ஆபாசமான படம் என்று கடும் கண்டனங்களைச் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கும் 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தில், சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.

பொதுவாக, பார்த்திபன் இயக்கும் படங்களில் அவரேதான் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தமுறை சமுத்திரக்கனியை ஹீரோவாக நடிக்க வைக்க இருக்கிறார்.

பார்த்திபன்

பார்த்திபன்

1989-ம் ஆண்டு 'புதிய பாதை' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமாகி அவரது குருநாதர் பாக்யராஜைப் போல முதல் படத்திலேயே பெண்களை அதிகம் கவர்ந்தார். அடுத்த படமே இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாக எடுத்து எதிர்ப்பைச் சம்பாதித்தார்.

உள்ளே வெளியே

உள்ளே வெளியே

1993-ல் பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் 'உள்ளே வெளியே'. ஆபாசமான படம் என்று கடும் கண்டனங்களைச் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன்.

உள்ளே வெளியே 2

உள்ளே வெளியே 2

'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்க இருக்கும் 'உள்ளே வெளியே 2' ஏற்கெனவே ரிலீஸான படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக இருக்கிறது. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் பார்த்திபன்.

ஹீரோ சமுத்திரக்கனி

ஹீரோ சமுத்திரக்கனி

பொதுவாக, பார்த்திபன் இயக்கும் படங்களில் அவரே தான் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தமுறை வித்தியாசமாக சமுத்திரக்கனியை ஹீரோவாக நடிக்கவைக்க இருக்கிறார். 'ஆடுகளம்' கிஷோர், மம்தா மோகன்தாஸ், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர். அத்துடன், பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும், 28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும், 38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை!" என ட்வீட் போட்டு நடிகைகளைத் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

English summary
Parthiban has decided to take a second part of the film 'ulle veliye'. Samuthirakani is acting lead role in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil