»   »  சமுத்திரக்கனியின் 'அப்பா'.... ஹீரோயினே இல்லையாம்!

சமுத்திரக்கனியின் 'அப்பா'.... ஹீரோயினே இல்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி இயக்கி வரும் புதிய படமான ‘அப்பா'வில் கதாநாயகியே கிடையாதாம்.

தொலைக்காட்சி தொடர் இயக்குநர், திரைப்பட இயக்குநர், பின்னணி குரல் கொடுப்பவர், நடிகர் எனப் பன்முகத் திறமையாளராக திகழ்பவர் சமுத்திரக்கனி.

சுப்ரமணியபுரத்தில் வித்தியாசமான வில்லனாக வந்து அனைவரையும் மிரட்டி, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இயக்கம்...

இயக்கம்...

அதனைத் தொடர்ந்து தமிழில் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் உள்ளிட்டப் படங்களை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.

சிறந்த நடிகர்..

சிறந்த நடிகர்..

இடையே தனது திறமையான நடிப்பால், தமிழில் நல்ல குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் அவர் வலம் வருகிறார். சாட்டை, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

வில்லன்...

வில்லன்...

சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த ரஜினி முருகன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'விசாரணை' மற்றும் 'காதலும் கடந்து போகும்' படங்களின் ரிலீசாக இருக்கின்றன.

போலீஸ் வேடம்...

போலீஸ் வேடம்...

இந்த இரண்டு படங்களிலும் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதிலும், காதலும் கடந்து போகும் படத்தில் சமுத்திரக்கனி தான் வில்லன் எனக் கூறப்படுகிறது.

அப்பா...

அப்பா...

இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. அப்படத்திற்கு அப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாயகிகள் இல்லை...

நாயகிகள் இல்லை...

சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாகக் கருதப்படும் இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியே இல்லையாம்.

அப்பா - மகன் பாசம்...

அப்பா - மகன் பாசம்...

அப்பா-மகன் இடையேயான மனதை உருக்கும் பாசம் பற்றிய படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே குணச்சித்திர நடிப்பில் பேர் போன சமுத்திரக்கனி இப்படத்திலும் நடிக்கிறார்.

அப்பா- அம்மா...

அப்பா- அம்மா...

ஏற்கனவே, தனுஷ் தயாரிக்கும் புதிய படத்திற்கு அம்மா கணக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல், கமலும், அமலாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ள படத்திற்கு, அப்பா-அம்மா விளையாட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது அப்பா படமும் சேர்ந்துள்ளது.

English summary
Appa is an upcoming Indian Tamil drama film written and directed by Samuthirakani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil