Don't Miss!
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தமிழ்நாட்டின் எதிர்காலமே.. டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த சமுத்திரகனி!
சென்னை: கோலிவுட் சினிமா உலகமே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்கு பயங்கர கோலாகலமாக டான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் தான் என்றும் இப்போ அவர் வைப்பது தான் சட்டம் என்றும் பேசியது பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலமே என உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து சமுத்திரகனி பேசியதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

டான் டிரைலர் வெளியீட்டு விழா
இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் டான். வரும் மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள டான் படத்தின் டிரைலர் நேற்று டிரைலர் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சிவாங்கி, பால சரவணன், கவின், ராஜு ஜெயமோகன், ஷாரிக், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமுத்திரகனி நெகிழ்ச்சி
அப்பாவை இழந்த மகன்கள் வளர்ந்து இப்படியொரு இடத்திற்கு வந்து நிற்கும் வலி எனக்கு நன்றாகவே தெரியும். தம்பி சிவகார்த்திகேயன் இன்னும் உயர்ந்து பெரிய இடத்துக்கு போவான் என நம்புகிறேன் என ரொம்பவே நெகிழ்ச்சியோடு பேசினார் சமுத்திரகனி. மேலும், டான் படத்தில் பல டேக்குகள் வாங்கி தான் நடித்ததாகவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அப்படியொரு கனமான பாத்திரம் என்றார்.

ஒரு டயலாக் சொல்ல முடியல
பல பக்க வசனம் என்றாலும், ஒரே மூச்சில் பேசிவிட்டு போய்விடுவேன். "அவன் என் குழந்தை டி" என்கிற அந்த ஒரு டயலாக்கை என்னால் சொல்ல முடியல. 10 டேக்குகளுக்கு மேல் சென்றது. தம்பி சிவகார்த்திகேயன் வேணாம்னா இன்னொரு நாள் எடுத்துக்கலாம் என சொல்லி விட்டார். அப்போ இப்போ சரியா வரலையான்னு கேட்டேன். பின்னர், 4 நாள் கழித்து அந்த காட்சியை படமாக்கினோம் என ஷூட்டிங் ஸ்பாட் நெகிழ்ச்சியான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் தான் ஹைலைட்
டான் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை கைப்பற்றி உள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ். தொடர்ந்து ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் அனைத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாகவே வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றது ஹைலைட்டாக மாறியது.

சிவகார்த்திகேயன் வைப்பது தான் சட்டம்
தமிழ்நாட்டில் இப்போதைக்கு சிவகார்த்திகேயன் தான் டான் என்றும் அவர் வைப்பது தான் சட்டம் என்றும் உதயநிதி ஸ்டாலின் செம கூலாக சிரித்துக் கொண்டே பேசியது பலரையும் ஷாக் ஆக்கியது. அதன் பின்னர், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இருவரும் தான் தமிழ்நாட்டின் தற்போதைய டான் என்றும் பேசி பரபரப்பை கிளப்பினார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் எதிர்காலமே
மேடையேறி சிவகார்த்திகேயனை பாராட்டிய சமுத்திரகனி, சிறப்பு விருந்தினாரக வந்திருந்த உதயநிதி ஸ்டாலினையும் பாராட்டாமல் விடவில்லை. தமிழ்நாட்டின் எதிர்காலமே என பாராட்டி உதயநிதி ஸ்டாலினின் உள்ளத்தை குளிர வைத்து விட்டார். தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய்யும் நீங்க தான் ரியல் டான் என உதயநிதி ஸ்டாலினை பாராட்டினார்.