»   »  புரட்சியாளர்களுக்கு சத்தமில்லாமல் சாப்பாடு கொடுக்கும் சமுத்திரக்கனி

புரட்சியாளர்களுக்கு சத்தமில்லாமல் சாப்பாடு கொடுக்கும் சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடி வருபவர்களுக்கு நடிகர் சமுத்திரக்கனி உணவு வழங்கி வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் புரட்சி நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவ-மாணவியர், இளைஞர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samuthirakani provides food to Jallikattu protestors

யாரும் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே உள்ளனர். மெரினா மற்றும் கோவையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு உணவு வழங்குகிறார் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி.

நடிகர் விவேக்கும் மெரினா போராட்டக்காரர்களுக்கு உணவு, நீர் அளித்துள்ளார். இது தவிர அடையாறு ஆனந்த பவன், சரவணா பவன் ஹோட்டல்கள்கள் புரட்சியாளர்களுக்கு தினமும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள உணவு பொட்டலங்களை சத்தமில்லாமல் வழங்கி வருவது தெரிய வந்துள்ளது.

புரட்சியாளர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸும் உணவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புது முயற்சியை ஆதரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

English summary
Actor cum Director Samuthirakani is supplying food to the protestors who are fighting for their cultural sport Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil