அருண் விஜய்யின் அண்ணனாக மாறிய சமுத்திரக்கனி.. அப்போ பிரகாஷ் ராஜ்?

சென்னை : தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண்விஜய் இப்பொழுது ஹரி இயக்கத்தில் ஏவி 33 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் இப்போது பழனியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கிராமத்து கதைகளத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு அண்ணனாக நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க இருந்தார். ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆக்ரோஷமான நடிப்பு

ஆக்ரோஷமான நடிப்பு

என்னை அறிந்தால் படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்த நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்து நடிக்கும் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் வெளியான தடம் மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஃபேவரைட் நடிகரானார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அருண்விஜய் இப்பொழுது இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி

மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி

அதிரடி ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களுக்கு மிகவும் பெயர் போன இயக்குனர் ஹரி சிங்கம் மூன்று பாகங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் சூர்யாவுடன் கூட்டணி அமைக்க இருந்தது. இந்தப்படத்திற்கு அருவா எனவும் மாஸான டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருக்க இதற்கிடையில் சூர்யாவுக்கும் இயக்குனர் ஹரிக்கும் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு இப்படம் இப்போது கைவிடப்படும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

தன்னுடைய வழக்கமான ஆக்ஷன் மசாலா பாணியிலேயே அருண் விஜய் நடிக்கும் இந்த திரைப்படமும் உருவாகி வரை தற்காலிகமாக A33 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் அருண் விஜய் மற்றும் பிரியா பவனி சங்கர் ஏற்கனவே மாஃபியா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்பொழுது இந்த திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இருவரும் இணைகின்றனர்.

கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜூ

கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜூ

பக்கா வில்லேஜ் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் முழுக்க முழுக்க வேஷ்டி சட்டையில் நெற்றியில் பொட்டுடன் செம்ம மாஸாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று முடிந்தது அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியின்போது அருண்விஜய்க்கு பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதில் அருண் விஜய்யுடன் கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜூ மோதும் சண்டை காட்சி நடுக்கடலில் படமாக்கப்பட்டது

அருண் விஜய்க்கு அண்ணனாக

அருண் விஜய்க்கு அண்ணனாக

பலத்த காயத்திலிருந்து குணமாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அருண் விஜய் தூத்துக்குடி, ராமேஸ்வரம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக பழனியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர்,ராதிகா சரத்குமார்,யோகி பாபு,தலைவாசல் விஜய்,அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி,விஜய் டிவி புகழ் என பலர் இதில் நடித்து வருகின்றனர். சென்டிமெண்ட் காட்சிகள் அதிரடி சண்டைக்காட்சிகள் என விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க இருந்தார்.

பிரகாஷ்ராஜ் விலகியுள்ளதாக

பிரகாஷ்ராஜ் விலகியுள்ளதாக

இயக்குனர் ஹரி இயக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதேபோல இந்த படத்திலும் அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் . ஆனால் இப்பொழுது இப்படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியுள்ளதாக தெரிகிறது. அதனால் பிரகாஷ்ராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகர் சமுத்திரக்கனி நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முறுக்கு மீசையுடன்

முறுக்கு மீசையுடன்

மேலும் படப்பிடிப்பில் சமுத்திரக்கனி முறுக்கு மீசையுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு இயக்குனர் ஹரியுடன் மிகத் தீவிரமான கதை விவாதத்தில் ஈடுபட்டு கொண்டு உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம வைரலாகி வருகிறது. ஹீரோ, இயக்குனர்,குணசித்திர கதாபாத்திரம் என எந்த ஒரு வேடம் கொடுத்தாலும் அசத்தும் சமுத்திரக்கனிக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்க இப்பொழுது எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் சமுத்திரக்கனி இப்பொழுது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அருண்விஜய்க்கு அண்ணனாக நடிக்க இருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். விரைவில் டைட்டில் மற்றும் பாடல்கள் வெளியாக இருக்க திடீரென பிரகாஷ்ராஜுக்கு பதிலாக சமுத்திரக்கனி அருண் விஜய்க்கு அண்ணனாக நடித்துவரும் செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X