»   »  தனுஷ் விஷயத்தில் ரஜினிக்கு நேர் எதிராக ஆசைப்படும் சமுத்திரக்கனி

தனுஷ் விஷயத்தில் ரஜினிக்கு நேர் எதிராக ஆசைப்படும் சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் தனுஷை அடிக்கடி பார்க்க விரும்புகிறார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி.

நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளராக இருந்து வந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனுஷ் நடிப்பில் மட்டும் அல்ல இயக்கத்திலும் திறமையானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

பிரபலங்களும், ரசிகர்களும் இயக்குனர் தனுஷை பாராட்டி வருகிறார்கள்.

சமுத்திரக்கனி

பவர் பாண்டி படத்தில் சிறப்பான காட்சிகள். தனுஷ் சார் மிகவும் திறமையானவர். எதிர்கால படங்களிலும் அவரை இயக்குனராக பார்க்க காத்திருக்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் சமுத்திரக்கனி.

ரஜினி

ரஜினி

ப. பாண்டி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, தனுஷ் ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.

தனுஷ்

தனுஷ்

அடுத்தடுத்து படம் இயக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ள நிலையில் இயக்குனர் தனுஷை அதிகம் பார்க்க விரும்புகிறார் சமுத்திரக்கனி.

விஐபி 2

விஐபி 2

விஐபி படத்தை அடுத்து விஐபி 2 படத்திலும் தனுஷின் அப்பாவாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. விஐபி2 படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் செமயாக நடித்திருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

English summary
While Rajinikanth advised Dhanush not to direct frequently, Samuthirakani wants to see his reel son as a director more.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil