»   »  என் அப்பா இப்பவும் என்னோடதான் இருக்கார்!- சமுத்திரக்கனி

என் அப்பா இப்பவும் என்னோடதான் இருக்கார்!- சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்பா படம் பார்த்த அப்பாக்கள், மகன்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா படம் கடந்த வாரம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமான சினிமா சமாச்சாரங்கள் ஏதுமில்லாத இந்த வித்தியாசமான படத்தை குடும்பத்துடன் பார்த்து வருகிறார்கள்.


Samuthirakkani's thanks giving status

தனது படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, சமூகவலைத்தளத்தில் சமுத்திரக்கனி இப்படி எழுதியுள்ளார்:


"பத்தாவது முடிச்ச கையோட சினிமால எதாவது பண்ணனும்னு சென்னைக்கு பஸ் ஏறி வந்தேன்.


ஆனா எதுவும் பண்ணமுடியாம ஊருக்கு போய்டேன்.. திரும்பி வந்தவன அடிக்காம உதைக்காம.. 'நீ ஏதோ பண்ணனும்னு ஆசைப்படுறனு தெரியுது! ஆனா, படிச்சி முடி.. உனக்கு நான் சப்போர்ட் பண்றனு' சொன்ன என் அப்பா, அடுத்த கொஞ்ச மாசத்துல இறந்துப் போய்ட்டார்.


ஆனா , இன்னைக்கு சினிமால ஓரளவு வந்துருக்கேனா அந்த வார்த்தை தான் காரணம்.. . இன்னமும் என் அப்பா என்கூட தான் இருக்காரு, என்னை ஊக்கப்படித்திட்டுதான் இருக்காருன்னு நம்பி ஓடிட்டு இருக்கேன்...


அப்பா-வைப் பார்த்து பாராட்டிய திருந்திய அப்பாகளுக்கும் மகன்களுக்கும் நன்றி.."

English summary
Director Samuthirakkani has thanked families those watched his Appa movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil