»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார் கீதா. அங்கு வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரேடியோஜாக்கியாக உள்ள இவரது தனது அழகிய குரலால் மலேசியத் தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர்.

குடும்பத் தொழிலின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டே தமிழ் சினிமா மீதும் ஒரு கண் வைத்தபடியே இருந்திருக்கிறார். நீண்டயோசனைக்குப் பின் தைரியமாக களத்தில் குதித்துவிட்டார். அவ்வளவாக பிரபலமாகாத முகங்களை வைத்து ஒரு படத்தைஇவரே தயாரிக்கிறார். படத்தின் பெயர் அறிந்தும் அறியாமலும்.

சினிமா தயாரிப்பில் இறங்குவது இவரது நெடுநாள் கனவாம். இப்போது நிறைவேறுவதில் மகிழ்ச்சியோடு கோடம்பாக்கத்தைசுற்றி வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டும் அங்குள்ள ஆட்களும் புதுசு என்றாலும் சிரித்தே எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.

இவரை புன்னகைப் பூ கீதா என்று தான் அழைக்கிறார்கள்.

அறிந்தும் அறியாமலும் படத்தின் ஹீரோயின் சம்யுக்ஷா. இவர் தெலுங்கில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒன் போர் த்ரீ(ஆங்கிலத்தில் ஐ லவ் யூ என்பதன் சுருக்கம் !) என்ற படத்தில் நடித்தவர். பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் கவர்ச்சியில்பின்னி எடுத்திருக்கிறார்.

தமிழிலும் இதே வேலையை நன்றாகவே செய்கிறாராம்.

ஹீரோ நவ்தீப். இவர் ஏற்கனவே ஜெய்ராம் என்று சரியாக போணியாகாத ஒரு படத்தில் நடித்தவர் தான். இவரைத் தவிர ஆர்யா,அனில் மேனன், பைவ் ஸ்டார் படத்தில் நடித்த கிருஷ்ணா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இவர்களைத் தவிர பிரகாஷ் ராஜ் இருக்கிறார்.

இதை யுவன்சங்கர் ராஜா. விஷ்ணுவர்த்தன் கதை எழுத (குறும்பு படத்தை இயக்கியவர்), படத்தை இயக்குவது நீலன்-கோபிநாத்ஆகிய இருவர்.

வழக்கமான இளமை கலாட்டாவை வயலன்ஸ் அண்ட் அழகிய பாடல்களில் சொல்கிறார்களாம். சென்னையில் கடந்த மாதம்படத்தின் துவக்க விழாவுடன் சூட்டிங்கும தொடங்கிவிட்டது.

உயர்ந்த தொழில்நுட்பத்துடன் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

படத்தின் தயாரிப்பாளர் புன்னகைப் பூ கீதாவைப் பார்த்தால் அவரே ஒரு ஹீரோயின் மாதிரித்தான் இருக்கிறார். பேசாம நீங்களேஹீரோயினா நடிக்கலாமே என்று அவரிடம் சொன்னால், அதற்கும் சிரிப்பைத் தான் பதிலாகத் தருகிறார்.

படத்தில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்க உள்ள இந்த டீம், பாடல் காட்சிகளுக்கு வழக்கம்போல்வெளிநாடுகளுக்குப் பறக்கும் திட்டத்தில் இருக்கிறது.

புதுமுகங்களை வைத்து எடுத்தாலும், சிக்கனம் பார்க்காமல் படத்தை ரிச்சாகக் கொண்டு வரும் முடிவில் இருக்கும் கீதா, பணத்தைகஞ்சத்தனம் இல்லாமல் எடுத்துவிட்டு வருகிறார்.

மலேசியத் தமிழ் பெண்ணின் முதல் பட முயற்சி இது. நல்ல படமா வந்தா சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil