For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்கடா அந்த எடிட்டர்.. சப்புன்னு முடிஞ்ச சண்டையை இப்படி ஊதி பெருசாக்கிட்டியே.. கடுப்பில் ரசிகர்கள்!

  |

  சென்னை: அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் ஏத்தி விடுறா என வைரலான மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், சம்யுக்தாவுக்கும் அனிதாவுக்கும் சண்டை நடக்கும் என வழக்கம் போல் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.

  அனிதா பேசியதை இடை மறித்து சம்யுக்தா கலாய்த்ததை நாளைக்கு கமல் சார் நிச்சயம் பஞ்சாயத்து பண்ன வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன.

  வேறு சில ரசிகர்கள் சண்டை நடக்காத நிகழ்ச்சியில் புரமோ கட்டில் சண்டையை மூட்டி விடுகிறாயா என பிக் பாஸ் எடிட்டர் மேல் தங்களது கோபத்தை கொட்டி உள்ளனர்.

  கன்னுக்குட்டி.. கன்னுக்குட்டி.. அனிதா பேச்சுக்கு ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன் அல்டிமேட்.. மரண கலாய்!

  கதறி அழுத அனிதா சம்பத்

  கதறி அழுத அனிதா சம்பத்

  கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுதது போதாதுன்னு மனசுக்கு பிடிச்சவங்க பத்தி பிக் பாஸ் பேச சொன்னதும் தனது கணவர் பற்றி பேசி, ஒரு கட்டத்தில் ஓவராக உருகி அழத் தொடங்கி விட்டார் அனிதா. டிராக் மாறி அனிதா ரம்பம் போடுகிறார் என ரம்யா கலாய்க்க, சம்யுக்தா சடன் பிரேக் போட்டது சர்ச்சையை கிளப்பியது.

  ஏத்தி விட்ட சனம்

  ஏத்தி விட்ட சனம்

  சம்யுக்தா அனிதாவுக்கு இடையே போன எபிசோடில் நடந்த விஷயத்தை எடுத்து பேசிய சனம் ஷெட்டி, அவங்க யாரு ரூல் போடுறது. எந்த ஒரு பஸரும் இல்லாதப்போ சம்யுக்தா ஸ்டாப் பண்ணது ரொம்ப தப்பு. அந்த இடத்துல சொன்னா அது தப்பாகிடும்னு சாம் கிட்ட தனியா சொன்னேன் அவ ஏத்துக்கல என கொஞ்சம் ஏத்தி விட்டார்.

  ரொம்பவே தப்பு

  ரொம்பவே தப்பு

  சனம் ஷெட்டி, அனிதா சம்பத் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே கேட்டுக் கொண்டிருந்த ஆரி அர்ஜுனாவும் சம்யுக்தா செய்தது தவறு என்பது போலவே பேசினார். என்ன பேசுறீங்க என கேட்ட சம்யுக்தாவை சனம் வாங்க வந்து ஜாயின் பண்ணிக்கோங்கன்னு சொல்லியும் அவர் அங்கே வராமல் தனது பாரபட்சத்தை தொடர்ந்தார்.

  நல்லா ஏத்தி விடுறா

  நல்லா ஏத்தி விடுறா

  அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் நல்லா ஏத்தி விடுறா என டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மற்ற ஹவுஸ்மேட்களிடம் போட்டுக் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தார் சம்யுக்தா. சனம் ஷெட்டி மறுபுறம் அனிதாவுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்த போதும், அனிதா தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸையும் பறித்துக் கொள்கிறார்கள் என சில்லுன்னே ஆகிவிட்டார்.

  எடிட்டர் எங்கே

  எடிட்டர் எங்கே

  அனிதா சம்பத், சம்யுக்தா பிரச்சனை பெரிய சண்டையில் போய் முடிவது போல புரமோவை கட் பண்ணி, சம்யுக்தா கும்பிடு போடுவதை எல்லாம் காட்டிய பிக் பாஸ் எடிட்டர் எங்கே என ரசிகர்கள் வெறி கொண்டு தேடி வருகின்றனர்.

  கமல் கேட்க வேண்டும்

  கமல் கேட்க வேண்டும்

  மேலும், இந்த வாரம் பஞ்சாயத்து பண்ண கமல் சாருக்கு கடைசியா ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு, இதற்காகத்தான் சம்யுக்தா, அனிதா பிரச்சனை சால்வ் ஆகமல் கூட இருக்கலாம் என்றும், நிச்சயம் சனிக்கிழமை கமல் சார் இந்த விவகாரத்தை பைசல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

  English summary
  Not like Promo 3 there is no such big fight between Samyuktha and Anitha or Sanam Shetty makes fans un happy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X