வெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்!

சென்னை: மனசே வராமல் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா.

நாமினேட் செய்யப்படாத நிலையில், பிக் பாஸ் டாப்புள் கார்டு மூலமாக அனிதா சம்பத் சம்யுக்தாவை கடைசியாக நாமினேட் செய்ததே அவர் வெளியேற காரணம்.

கிளம்பும் போது, நல்லா டான்ஸ் எல்லாம் ஆடினாலும், அவர் உள்ளுக்குள் ரொம்பவே ஃபீல் பண்ணி அழுதது தெளிவாகவே தெரிந்தது.

கண்ணீர் விட்ட பாலா

கண்ணீர் விட்ட பாலா

குரூபிசம் என்று சொல்லாமல் இருந்தாலும், சம்யுக்தா, ஷிவானி உடன் ஒரு குழுவாகவே பாலா இதுவரை செயல்பட்டு வந்தார். ஏகப்பட்ட நேரத்தில் பாலாவுக்கு பெரிய சப்போர்ட்டாக சம்யுக்தா இருந்துள்ளார். நிஷா சேவ் ஆனதும் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்னாலும், மனதுக்குள் சம்யுக்தா செல்வதால் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கண்களில் தானாகவே கண்ணீர் வந்து விட்டது.

ஷஃபல் டான்ஸ்

ஷஃபல் டான்ஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மனமே இல்லாமல் ஹவுஸ்மேட்கள் மத்தியில் வைத்த அன்பு காரணமாக கடைசி வரைக்கும் வெளியேற விரும்பாமல் நின்று கொண்டிருந்த சம்யுக்தாவை, ஷஃபல் டான்ஸ் ஆடி ஹவுஸ்மேட்கள் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தனர்.

அஜூக்கு காயின்ஸ்

அஜூக்கு காயின்ஸ்

பிக் பாஸ் வீட்டில் ஷிவானி, சம்யுக்தாவை அம்மாவாக பார்க்கிறேன் என ஆரம்பத்தில் கூறினார். ஆனால், அதன் பிறகு பாலாவுடனே அவர் அதிக நேரத்தை செலவிட தொடங்கியதால், ஆஜூவை தான் தனது மகனாக பார்க்க ஆரம்பித்தார் சம்யுக்தா. வெளியேறும் போது, உண்டியலை உடைத்து அதில் உள்ள அத்தனை காயின்ஸையும் ஆஜீத்துக்கே கொடுத்துச் சென்றார். பாலாவுக்கும் ஷிவானிக்கும் ஒன்றுமே கொடுக்கவில்லை.

அனிதாவை மறக்கமாட்டார்

அனிதாவை மறக்கமாட்டார்

பிக் பாஸ் நிகழ்ச்சியை மறந்தாலும் அனிதா சம்பத்தை ஒரு போதும் சம்யுக்தா மறக்கவே மாட்டார். போன வாரமே வெளியேற வேண்டிய அனிதா சம்பத், சுச்சியால் புண்ணியம் தேடிக் கொண்டார். இந்த வாரம் வெளியேற வேண்டிய அனிதா, கடைசியாக கிடைத்த டாப்புள் கார்டை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் தப்பித்து, சம்யுக்தாவை வெளியே அனுப்பி விட்டார்.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
கண்ணியத்துக்கு குறைவு வராது

கண்ணியத்துக்கு குறைவு வராது

வெளியே வந்து கமலிடம் பேசும் போது, கண் கலங்கியபடியே சம்யுக்தா இருந்தார். மகன் ரயானை காணப் போகும் சந்தோஷம் இருந்தாலும், இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது வருத்தம் தான் என ஓப்பனாகவே கூறினார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாக விளையாடி நீங்க செய்த செயல், பேசிய பேச்சு எதுவுமே உங்கள் கண்ணியத்தை குறைக்காது. நல்லாவே விளையாடுனீங்க வாழ்த்துக்கள் என கமல், சம்யுக்தாவை சாந்தப்படுத்தி வழியனுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X