twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஶ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம்... பிரபல சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அஞ்சலி!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    மும்பையில் இன்று நடிகை ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு- வீடியோ

    பூரி : இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

    அவர் இறந்த செய்தி இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் அவருக்கு மணல் சிற்பம் வடித்துள்ளார் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்.

    ஶ்ரீதேவி

    ஶ்ரீதேவி

    தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

    இரங்கல்

    இரங்கல்

    அவர் இறந்த செய்தி இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்களும், தமிழ், இந்தி நடிகர், நடிகைகளும் ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களிலும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    மணல் சிற்பம்

    ஶ்ரீதேவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவுக்கும் விதமாகவும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இந்தியாவின் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்னாயக் ஸ்ரீ தேவியின் மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் வடித்துள்ளார்.

    சிறுவயது நாயகி

    எனது சிறுவயது நாயகிக்கு அஞ்சலி என்று கூறியுள்ள பட்நாயக், தனது சிற்பத்தில் 'RIP Sridevi' என்றும் 'we will miss you' என்றும் எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் ஶ்ரீதேவி. 'உங்கள் இழப்பால் வருந்துகிறோம்' என்று ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actress Sridevi died at the age of 54 due to a heart attack. Many cinema celebrities and fans have expressed condolences to the demise of Sridevi. The sand artr has been sculpted by the famous sand sculptor Sudarshan Patnaik at Puri Beach.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X