சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்!

By

பெங்களூரு: சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இயக்குனர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாவில் பல திறமையான கலைஞர்கள் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர்.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், இந்தி நடிகர் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புத், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மலையாள இயக்குனர் சச்சி உட்பட பலர் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சூஃபியும் சுஜாதாயும் என்ற படத்தை இயக்கிய ஷாநவாஸ் மரணமடைந்தார்.

இயக்குனர் எஸ்.பரத்

இயக்குனர் எஸ்.பரத்


இந்நிலையில், பிரபல கன்னட பட இயக்குனர் எஸ்.பரத் நேற்று முன்தினம் இரவு திடீரென மரணமடைந்து இருக்கிறார். கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சில நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னட சினிமா

கன்னட சினிமா

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 45. இதையடுத்து கன்னட சினிமா துறையினரும் ரசிகர்களும் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விரைவிலேயே மறைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

கான்டி மூலம் அறிமுகம்

கான்டி மூலம் அறிமுகம்

மறைந்த எஸ்.பரத், ஶ்ரீமுரளி, ரம்யா, மும்தாஜ் நடித்த கான்டி (Kanti) என்ற படம் மூலம் இயக்குனர் ஆனவர். மராத்தி பெண் மீது காதல் கொள்ளும் கல்லூரி இளைஞனின் காதல் கதை இது. இந்தப் படம் ஹிட்டானது. இதற்கு குருகிரண் இசை அமைத்திருந்தார்.

தூணாக இருந்தவர்

தூணாக இருந்தவர்

இதையடுத்து பிரபல கன்னட ஹீரோ ரவிச்சந்திரன் மகன் மனுரஞ்சன் ஹீரோவாக அறிமுகமான, சஹேபா என்ற படத்தை இயக்கினார். இதில் ஷான்வி, லட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. இயக்குனர் பரத் மறைவை அடுத்து, மனோரஞ்சன் வெளியிட்ட இரங்கலில், எனது தூணாக இருந்தவர் நீங்கள். உங்கள் மறைவை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.

வழிகாட்டியாக இருந்தவர்

வழிகாட்டியாக இருந்தவர்

நடிகை ரம்யா வெளியிட்ட இரங்கலில், அவரின் அறிமுகப் படத்தில் நடித்தேன். அப்போது நான் முற்றிலும் புதியவள். எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் பரத். அவர் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருந்தது. அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X