»   »  அம்மா பிளாஸ்டிக்கு, 'நீவு நமகே பேடாம்மா': ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்

அம்மா பிளாஸ்டிக்கு, 'நீவு நமகே பேடாம்மா': ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னட படத்தில் நடிக்கும் திட்டம் இல்லை என்று கூறிய ஸ்ருதி ஹாஸனை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

அர்ஜுனின் உறவினர் த்ருவா சார்ஜாவின் புதிய கன்னட படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் த்ருவா படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ருதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

வதந்தி

தற்போதைக்கு கன்னட படத்தில் நடிக்கும் திட்டம் இல்லை. கன்னட படத்தில் நான் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்ருதி ட்வீட்டினார்.

சர்ஜரி கேர்ள்

டியர் சர்ஜரி கேர்ள். கன்னடாவில் சர்ஜரி ஹீரோயின்கள் தேவையில்லை. உங்களின் தந்தையின் கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பெங்களூரு

பெங்களூரு நகரில் ஏற்கனவே நிறைய பிளாஸ்டிக் உள்ளது. மேலும் வேண்டாம்

அப்பா

உங்களின் அப்பா முதலில் நடித்தது கன்னட படத்தில் தான்.

சாண்டல்வுட்

பிரச்சனை இல்லை. நீங்கள் எந்த கன்னட படத்திற்கும் ஒத்து வர மாட்டீர்கள். கன்னட திரையுலகில் பல திறமையான ஹீரோயின்கள் உள்ளனர்.

English summary
Sandalwood fans blast Shruti Haasan who clarified on twitter that she has no plans of doing a Kannada film in the near future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil