twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியைப் போற்றும் பாடல்!… நடனமாடிய 1000 ரசிகர்கள்!!

    By Mayura Akilan
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக கன்னடத் திரைப்படப் பாடல் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நீண்டகால நண்பரான ராஜ்பகதூர் முதன் முறையாக நடித்துள்ளார்.

    ரஜினிகாந்தின் எளிமை, நண்பர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றை சிறப்பிக்கும் வகையில் பாடல் எழுதப்பட்டுள்ளதாம்.

    ரஜினி என்றாலே அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் பெருகும். அவரைப் பற்றிய சிறப்பிக்கும் பாடலில் நடனமாட வேண்டும் என்று கேட்ட உடன் ஆயிரம் ரசிகர்கள் நடனமாடியுள்ளனராம்

    ரஜினியின் சிறப்பு

    ரஜினியின் சிறப்பு

    'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் கன்னடப்பாடலில் ரஜினிகாந்தின் சிறப்புகளைக்கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

    ரஜினிக்கு அர்ப்பணிப்பு

    ரஜினிக்கு அர்ப்பணிப்பு

    ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

    எளிமையான சூப்பர் ஸ்டார்

    எளிமையான சூப்பர் ஸ்டார்

    ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பின்னரும் அவருடைய நண்பர்களிடம் எளிமையாகவே பழகுகிறார். ரஜினியின் இறைபக்தி, மனிதநேயம் உள்ளிட்ட நற்பண்புகள் ஆகியவைகளை போற்றும் வகையில்லான வரிகள் பாடலில் இடம் பெற்றுள்ளது.

    ரஜினியின் நண்பர்

    ரஜினியின் நண்பர்

    ரஜினியின் நீண்டகால நண்பரான ராஜ்பகதூர் முதன்முறையாக கன்னடப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார்.

    ஆயிரம் ரசிகர்கள்

    ஆயிரம் ரசிகர்கள்

    இதில்தான் ரஜினியை சிறப்பிக்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. ரஜினியை சிறப்பிக்கும் பாடலுக்கு அவரது ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர். இந்தப் பாடல் மல்லேஸ்வரம் அருகே மிகப்பெரிய மைதானத்தில் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

    English summary
    A song from an upcoming Kannada film starring Rajinikanth's friend Raj Bahadur in the lead, is reportedly a tribute to the Superstar. Called Belledare Belleyabeku Rajinikantharange, the song was recently shot at a ground near Malleswaram. The song, dedicated to Rajinikanth, has been written by the film's director Rushi and set to tune by Pradeep Raj, while Vijay Prakash has sung it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X