»   »  இன்று பிரமாண்டமாய் வெளியாகிறது சண்டமாருதம்... அதிக அரங்குகளில் வெளியாகும் சரத்குமார் படம்!

இன்று பிரமாண்டமாய் வெளியாகிறது சண்டமாருதம்... அதிக அரங்குகளில் வெளியாகும் சரத்குமார் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் சரத்குமார் படம் என்ற பெருமையுடன் வெளியாகிறது சண்டமாருதம்.

சண்டமாருதம் படத்தை ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். சரத்குமாரை வைத்து மகா பிரபு, ஏய் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் வெங்கடேஷ்.

வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வெற்றிபெற்று, பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த சரத்குமார், மீண்டும் ஹீரோவாக.. அதுவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் இந்த சண்டமாருதம். ஒன்றில் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

Sandamarutham releasing big in TN and Maharashtra

சரத்குமாரின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக அதிக அரங்குகளில் வெளியாகும் படம் இந்த சண்டமாருதம்தான்.

தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்திருந்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 40 அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகிறது.

Sandamarutham releasing big in TN and Maharashtra

மகாராஷ்ட்ராவில் மும்பை, புனே போன்ற நகரங்களில் நூறு அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகிறது.

English summary
Sarathkumar's Sandamarutham movie is releasing all over Tamil Nadu and Maharashtra in more than 500 screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil